24 ஆண்டுகள் கடந்தன..பெட்டிக்குள்இருந்த ரூபாய் நோட்டுகள் செல்லரிக்கப்பட்டன..ஆனால்
Featured
-
அமெரிக்கா
அமெரிக்காவின் முருகன் ஆலயங்கள்
-
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் முருகன் ஆலயங்கள்
-
இங்கிலாந்து
இங்கிலாந்தின் முருகன்ஆலயங்கள்
-
இந்தியா
இந்தியாவின் முருகன் ஆலயங்கள்.
-
இலங்கை
-
கனடா
கனடாவில் உள்ள முருகன் ஆலயங்கள்
-
சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து முருகன் ஆலயங்கள்
-
சேலம்
-
ஜெர்மனி
ஜெர்மனியில் உள்ள முருகன் ஆலயங்கள்
-
திருச்சி
-
மலேசியா
மலேசியவின் முருகன் ஆலயங்கள்
Latest
செல்வாய் சீன மண்ணை நோக்கி..
செல்வாய் சீன மண்ணை நோக்கி……………..,,,,, வெல்வாய் அந்த கொரோனோசை!!!!!!!!!!! வானம் வந்து கவிழ்ந்து உன்னை கானம் கொண்டு வணங்குதே! தானம் என்ன தாளம் என்ன தந்தேன் எனது நெஞ்சையே!! சொல்வதிங்கே யான் என்றாலும் சொல்லவைப்பது நீ அன்றோ வெல்வதிங்கே யாம் என்றாலும் வெல்லவைப்பதும் நீ அன்றோ!!!! கொன்று ஒழியும் நோயாம் அது கொறோனோ வைரசாம்!! சின்னம் சிறு உயிர் எல்லாமும் சிந்தை கலங்கி நிற்குதே!! வெந்தமானுடர் உடலைக்காக்க வேல்பிடித்து வந்தேயானால்!!! சீனம் உந்தன் சிறப்பை நாளும் செப்பிவிட்டு செல்லுமே!!!! தமிழர் கடவுள் என்றால் என்ன! சீனர் கடவுள் என்றால் என்ன! எல்லாமுமே நீ தான் கந்தா!!!! எல்லாமுமே நீ தான்!!! எழுவாய் !!உன் இடத்திருந்து செல்வாய் !!சீன மண்ணை நோக்கி வெல்வாய் !!!அந்த கொரோனசை வாழவை அந்த மனித்த்தை!!!!!! sri bava
பால தேவராயன்

பால தேவராயன் 16 ஆம் நாற்றாண்டில் வாழந்த முனிவர் நோய்நொடி இல்லாமலும், அழிவு நேராமலும் காக்கவேண்டும் என்று உடலின் ஒவ்வொரு உறுப்பின் பெயராகச் சொல்லி “காக்க” இறைவனை வேண்டுவதும். இறைவனைத் தலையால் வணங்குவது முறை ஆகலின் உறுப்புக்கள் தலையிலிருந்து வரிசைப்படுத்தப்பட்டு இவ் வேண்டுதல் அமையும். அன்றாட கடன்களை முடித்த பின்னர் தூய்மையான ஓரிடத்தில் இருந்துகொண்டு இந்தக் காப்புப் பாடல்களைச் சொல்லவேண்டும் என்று விநாயக கவச நூலின் பதிப்பு குறிப்பிடுகிறது. இவ்வாறு பாடி இறைவனைவேண்டும்கவசங்கள் ஆறு 1. சிவ கவசம். 2. கந்த சஷ்டி கவசம், 3. சண்முக கவசம், 4. சத்தி கவசம், 5. விநாயகர் அகவல் 6. நாராயண கவசம் இவைகளில் கவசங்களில் உலகம் முழுமைக்கும் உள்ள ஆன்மீக அன்பர்கள் பெரிதும் பாடி வேண்டும் கவசம் கந்த சஷ்டி கவசமாகும் இதனை இயற்றிய முனிவர் பாலதேவராயன் ஆவார். [கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. ஆக்குநர்: Yokishivam]
உலக முடிவு எப்போது – பகுதி – 1
விஞ்ஞான உலகம் எவ்வளவு விந்தைகளைக் கண்டுபிடித்து நம்மை வியக்க வைத்தாலும், நமது முன்னோர்கள் கண்டு சொன்னவையில் ஆயிரத்தில் ஒன்று என்ற விதத்தில் தான் அவை இருக்கின்றன என்ற உண்மையை நாம் புரிந்துகொண்டு நம் முன்னோர்களுக்குத் தலை வணங்க வேண்டும். நம் பெருமையும் உயர்வும் நமக்குத் தெரியாமல் நமக்குள் நாமே சண்டையிட்டு இழிவுபடுத்திக் கொண்டு உறுதியற்ற உண்மைகளைக் கொண்ட மற்றவரைப் பெரிதாக மதிக்கின்றோம். வியக்கின்றோம். இதைத்தான் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொன்னார்களோ? உலகத்தின் தோற்றம், நிலைபேறு, ஒடுக்கம் பற்றி சைவம் என்ன கூறுகின்றது ? **விஞ்ஞானம் என்ன கூறுகின்றது ? **நவீன விஞ்ஞானமும், சைவமும் முரண்படுகின்றதா ? “ஹர ஹர நம பார்பதீபதையே–அரஹர மஹா தேவா…. மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்”…. அப்பெரும் புவிக்குத் தானோர் ஆயிரம் கோடி அண்டம்” ————————-கந்தபுராணம்——————— பூமி சார்பாகவே ஆயிரங்கோடி அண்டத் தொகுதிகளுக்கு மேல் உள்ளன என்று கூறியுள்ளது கந்தபுராணம். இன்று அண்டவியல் விஞ்ஞானமும் இதையே உறுதி செய்துள்ளது. இந்த அண்டத்தொகுதிகள் பெரு நாத வெடிப்பின் (cataclysmic explosion of Big Bang) ஊடாக வெடித்து இன்றும் விரிந்து கொண்டிருக்கின்றன என்று இன்றைய அண்டவியல் கூறுகின்றது. இதையே மாணிக்கவாசகர் “அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம், அளப்பருந்தன்மை வளப்பெருங் காட்சி, ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின், நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன” ————————–திருவாசகம்————- மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில் இவ்வாறு விரிவடைகின்ற அண்டத்தொகுதியின் காட்சியை விளக்குகின்றார். இந்த அண்டத் தொகுதி அதன் தோற்றத்தில் இருந்து இன்னமும் விரிவடைந்து கொண்டிருக்கின்றது என்ற உண்மை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை விஞ்ஞானத்துக்கும் பிடிபடாமல் இருந்த ஒன்றாகும். இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானியாகிய “ஸ்டீவன் ஹோக்கிங்ஸ்” இதை தமது ஆய்வுகளில் விளக்கும்வரை மாணிக்கவாசகரின் “நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன” என்ற வரிகளுக்கான சரியான விளக்கம் யாராலும் தரப்படவில்லை. இவ்வாறு விரிவடைகின்ற அண்டத் தொகுதிகள் யாவும் அவற்றின் உள்ளிட்ட சடக்கோளங்களின் பிடி அதிகரிக்க, அதிகரிக்க […]
உந்தன் படைப்பிலே வந்ததோ

எத்தனை கோடி கொடுமை வைத்தாய் இறைவா! இறைவா! இறைவா! இறைவா!அத்தனையும் உந்தன் படைப்பிலே வந்ததோ!அத்தனையும் உந்தன் படைப்பிலே வந்ததோ!எத்தனை கோடி கொடுமை வைத்தாய்! இறைவா! புத்தினுள்ளே வரும் பாம்பை போலவித்தகமாய் பல மனிதர்கள்!சத்தியங்கள் ! தர்மங்கள் !தோற்றது இங்கே!எத்தனை கொடுமை வைத்தாய்இறைவா ! இறைவா! பக்தர்கள் போல் நடிக்கும் பாதகர்கள்!பசுக்களைப் போல் நடிக்கும் சாதுக்கள்!சொத்துக்களே பெரிதான சொந்தங்கள்!செத்தபின் வரும் எனும் எண்ணங்கள்!எத்தனை கொடுமைவைத்தாய் இறைவா! இறைவா! பணத்தினையே இவர் கடவுள் என்பர்!குணத்தினை நாளும் மதித்திருக்கார்!பள்ளத்திலே வீழ்ந்த விட்ட குருடரைப்போல்கண்கள் இழந்த மானிடர்கள்!கண்கள் இழந்த மானிடர்கள்!எத்தனை கோடி கொடுமைவைத்தாய் இறைவா! இறைவா! ஏழைகள் தனையே ஏன் படைத்தாய்! நீஏழைகள் தனையே ஏன் படைத்தாய்?வாழவும் இன்றி சாகவும் இன்றி அடிமைகளாய் !அனாதைகளாய்!வாழ்கின்றார் பார்!எத்தனை கோடி கொடுமைவைத்தாய் இறைவா! இறைவா! முருகன் கவிதைகள்
அற்புதங்கள் தொகுப்பு

சண்முகர்சிலையின் அற்புதம் திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் டச்சுக்காரர்களும் [உலாந்தகர்] போர்ச்சுக்கீசியர்களும் [பரங்கியர்]அவ்வப்போது ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.திருமலைக்கு கப்பல் படை இல்லாததும் தலைநகரமான மதுரையிலிருந்து தென்கோடியை அவரது இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வைக்கஇயலாமல் போனதும் அந்நியரின் கையும் மதமும் வேறூன்ற வித்திட்டது.கப்பல் வலிமையுடனிருந்த டச்சுக்காரர்களும் போர்ச்சுக்கீசியர்களூம் கடற்கரை பகுதிக்குள் அத்துமீறிக்கொள்ளை அடித்துவிட்டு கடல் வழியாகத் தப்பிச் செல்லும் போக்குடையவர்களாக இருந்தனர்.கொற்கைக் குடாவான மன்னார் வளைகுடாவில் விளைந்த முத்துக்களும்,சங்குகளும், கடற்கரையோரமிருந்த கோயில்களின் பொற்சிலைகளும், கருவூலங்களும் அக்கொள்ளையர்களின் கொள்கைகளாகயிருந்தன. கி.பி.1635 இல் தூத்துக்குடி போர்ச்சுக்கீசியர்களின் அடக்குமுறைக்கு உள்ளானது. போர்ச்சுக்கீசியர்கள் திருமலையுடன் நட்புடனிருந்ததால் தன்னுடைய நாட்டில் அடித்த கொள்ளையை திருமலைமன்னர் கண்டு கொள்ளவில்லை.ஏனென்றால்திருமலைக்கும் இராமனாதபுரம் சேதுபதிகளுக்கும் நடைபெற்றப் போரில் போர்ச்சுக்கீசியர்களின் ஆயுத உதவியாலும்,படை உதவியாலும் திருமலை வெற்றி பெற்றார்.இந்த உதவி எதிரொலியே கொள்ளையைக் கண்டு கொள்ளாமலிருக்கச் செய்தது.எனவே தென்கடற்கரைப் பகுதி பரதவர்கள் மற்றும் பிற மக்களும் பல இன்னல்களைஅனுபவித்தனர்.காயல்பட்டினம் துறைமுகமாகவும் அரியமுத்துக்கள் கிடைத்தப் பகுதியாகவுமிருந்தது. அயல்நாட்டுடன் வணிகம் செழித்திருந்தது.டச்சுக்காரர்கள் காயல்பட்டினத்தில் வரி வசூலித்து வந்தனர்.கி.பி.1648 இல் போர்ச்சுக்கீசியர்களூக்கு ஆதரவான திருமலை,டச்சுக்காரர்களை காயல்பட்டினத்திலிருந்து வெளியேறச் செய்தார்.இதனால் மிகுந்த அவமானமும் நஷ்டமும் அடைந்து கொண்டதாக நினைத்த டச்சுக்காரர்கள்திருச்செந்தூருக்குத் தங்களுடைய இருப்பிடத்தை மாற்றியதுடன்,அங்கிருந்த அப்பாவி இந்துக்களைக் கொள்ளையிட்டனர்.வீடுகளுக்குத் தீயிட்டனர்.தங்களுடைய இழப்பிற்காக கட்டாய வரி வசூல் செய்தனர்.கடற்கரைக் கோயிலின் பாறைக் குடைவரை எழில்மிகுச் சிற்பங்களை உடைத்து றிந்தனர்.கற்சிற்பங்களை உடைத்தனர்.அங்கிருந்த எழில்மிகு அய்ம்பொன் சிலைகளையும் சண்முகரின் சிற்பத்தையும் நடராஜ மூர்த்தியின் சிற்பத்தையும், மேலக்கோயில்,வெயிலுகந்தம்மன் கோயில் சிலைகளையும் கணக்கிலடங்காத பொன்நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு வெளியேறப் புறப்பட்டனர்.தங்களுடைய தெய்வத்தை களவாடிச் செல்லுவது கண்டு பொறுக்காத உள்ளூர் மக்களாகிய தலத்தார் [அனைத்து ஜாதி மக்கள்] தங்கள் கையில் கிடைத்தஆயுதங்களைக் கொண்டு எதிர்த்தனர்.வேதங்களோதும் அந்தணர்களாகிய திரிசுதந்திரர்களும் கையில் ஆயுதமேந்திப் போராடினர்.திரிசுதந்திரர்கள் உட்பட பலர் உள்ளூர் மக்கள் மாண்டனர்.டச்சுக் கொள்ளையர்கள் படகுகள் மூலம் களவாடியப் பொருட்களுடன் இலங்கை நோக்கிப் பயணமானர். திருச்செந்தூரைத் தாண்டுமுன்னே திடீரெனபுயல்,மழை தாக்கியது. தெய்வமென்று பாராமல் சிலைகளைத் தூக்கி வந்ததுதான் […]
உலக முடிவு எப்போது ??? – பகுதி – 3
** மஹா கைலாயம் எங்குள்ளது ? இமய மலையிலா ??? ** சிவபெருமானின் சங்கார தாண்டவம்/ ஊழி தாண்டவம் யாது? ** லலிதா சஹஸ்ர நாமத்தின் உண்மை பொருள் என்ன?? ** சிவலிங்கத்தின் உண்மை விளக்கம் என்ன ? ** சைவம் விளங்கினால் எல்லா சமயங்களும் விளங்கும்.. (உலக முடிவு எப்போது?? – பகுதி – (1 & 2 ) என்ற முன்னைய பகுதிகளை படிக்க முன் இந்த பகுதியை கண்டிப்பாக படிக்க வேண்டாம்…. சைவம் கூறும் பஞ்ச-பிரளயங்களில் (உலக முடிவு) ஏனைய பிரளயங்களை பற்றி இங்கு பார்ப்போம். 3. அவாந்தர பிரளயம்; நாம் வசிக்கும் பூமி உள்ளிட்ட பால்வீதி அண்டத்தொகுதிகள் யாவும் பூலோகம் என்று பார்த்தோம். இதற்கு மேலே 7 உலகத் தொகுதிகள் உள்ளன. இவற்றின் வரிசை பின்வருமாறு: 1. பூலோகம் 2. புவர் லோகம் ;இது எமது பால் வீதிக்கு அடுத்ததாக 2.5 மில்லியன் ஒளி வருட தூரத்துக்கு அப்பால் உள்ள அன்ட்றோமீடா அண்டத்தொகுதியாக இருக்கலாம். (Andromeda galaxy is 2.5 million light years away from our earth. This galaxy itself is so large and the light takes 150,000 years to traverses through this galaxy). 3. சுவர் லோகம் – இதைத்தான் சுவர்க்க லோகம் என்று மதங்கள் கூறுகின்றன. 4. மஹர் லோகம் 5. ஜன லோகம் -இங்குதான் எமது பித்ருக்கள் உறைகின்றார்கள். 6.தப லோகம் 7.சத்திய லோகம் – இங்கு பிரம்மா தனது பத்தினிகளாகிய காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி ஆகியோருடன் உறைகின்றார். இந்த உலகங்களின் குறிப்பை காயத்திரி மந்திரத்திலும் காணலாம். இதற்கும் மேலே விஷ்ணு லோகம் உள்ளது. இதை வைகுந்தம் என்பர். இதற்கும் மேலே உள்ளது சிவலோகம். இதேபோல கீழ் உலகங்கள் அதளம் முதல் பாதாளம் ஈறாக 7 உள்ளன. இவையாவன 1. அதலம் 2. விதலம் […]
அருணகிரிநாதர்

அருணகிரிநாதர், தெற்கிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் சென்னைக்கு அருகே உள்ள திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப்போல் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருவண்ணாமலை என்று சிலரும், காவிரிப்பூம்பட்டினம் என்று சிலரும் அருணகிரிநாதர் பிறந்த இடம் என்று சொல்கின்றனர். தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் சொல்கின்றனர். திருவண்ணாமலைக்கு எப்போது வந்தார் என்பது சரிவரத் தெரியவில்லை. சிலர் இவருடைய தாயார் ஒரு பரத்தை என்றும் சொல்கின்றனர். இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்ததாய்ச் சொல்லுவதுண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். இவர் தீய செயல்களைச் செய்கின்றார், சிறு வயதில் இருந்தே பெண்ணாசை கொண்டவராய் இருக்கிறார் என்பது தெரிந்தும் அந்த அம்மையார் நாளாவட்டத்தில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணமும் ஆகியது. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ, பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும், வெளியில் பரத்தையரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாய்ச் […]
சென்னை கந்தகோட்டம்_முருகன் வரலாறு
வள்ளலார் பாடிய சென்னை #கந்தகோட்டம்_முருகன் வரலாறு! 17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த வரலாறு இது. ஒரு கோயிலில் உற்ஸவர் சிலை செய்ய வேண்டும் என்று நிர்வாகத்தினர் விரும்பினர். சிற்ப வல்லுனர்கள் மூலம்,பஞ்சலோகத் திருமேனி வார்க்கப்பட்டது. வார்ப்படச் சூடு அடங்கும் முன், சிலையை வெளியே எடுக்கப்பட்டது. தகதகவெனப் பிரகாசித்தது சிலை, இருந்தாலும் அங்கும், இங்குமாக பிசிறுகள் நீட்டிக் கொண்டிருந்தன. அவற்றை நீக்கி தூய்மை செய்யலாம் என்ற எண்ணத்தில், தலைமை சிற்பி வந்த போது, உடம் பெங்கும் தீப்பற்றியது போல எரிச்சல் பரவியது.வலியால் துடித்த அவர், மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். பார்த்தவர்கள் பதறினர். முகத்தில் தண்ணீர் தெளிக்க சிற்பி கண் விழித்தார். அவர் எழுந்தாரே தவிர, கண்களில் இருந்த பயம் அப்படியே தெரிந்தது. கைகளைக் கூப்பி, “பெரியோர்களே! இந்த சிலை சாதாரணமானது அல்ல! தெய்வ சான்னித்தியம் நிறைந்த இதை தொட பயமாக இருக்கிறது. மன்னியுங்கள்! பிசிறுகளைப் போக்கி, தூய்மைப்படுத்தும் சக்தி எனக்கு இல்லை” என்றார். “தலைமைச் சிற்பியே இப்படிச் சொல்கிறாரே” என நிர்வாகிகள் திகைத்தனர். அதன் பின், பிசிறுகளுடன் உள்ள சிலையை வைத்து திருவிழா நடத்தக் கூடாது எனக் கருதி, அதை அறையில் பூட்டிவைத்தனர். இரண்டு ஆண்டுக்குப் பின், வேதத்தில் கரை கண்ட பண்டிதர் ஸ்ரீசாம்பையர் காசியில் இருந்து வந்தார். மூலவரைத் தரிசித்த பின், உற்ஸவரையும் தரிசிக்க விரும்பினார்.அவரிடம் கோயில் பணியாளர்கள், உற்ஸவர் சிலை குறித்த ரகசியங்களை விவரித்தனர். ஆனால், சாம்பையரின் வற்புறுத்தலால் அறைக்கதவு திறக்கப்பட்டது.சிலையைக் கண்டு மெய்சிலிர்த்த பண்டிதர் நிர்வாகிகளிடம், “நீங்கள் அனைவரும் புண்ணியசாலிகள். இங்குள்ள மூலவர் அருள் பொழிவதில் முதல்வராக விளங்குகிறார். அதே சான்னித்தியம், உற்ஸவர் சிலையிலும் இருக்கிறது. அருளை அள்ளித் தரும் இந்த சிலையை, தியானிக்கலாமே தவிர, உளியால் செதுக்கக் கூடாது. ஆத்ம சக்தியால் நான் தூய்மை செய்கிறேன்” என்றார். சிலையை சுற்றிலும் திரையிட்டு, உள்புறம் அமர்ந்த பண்டிதர், மந்திரங்களை ஸ்வரத்துடன் சொல்லச் சொல்ல, […]
மொரீஷியஸில் உள்ள இந்து கோவில்
இந்த திராவிட அதிசயம் மொரீஷியஸில் உள்ள இந்து கோவில்களின் பட்டியலில் , வேல் முருகன் என்ற இந்தியத் தொழிலாளியின் யோசனையின் காரணமாக,1907 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அவர் கார்ப்ஸ் டி கார்ட் மலையின் ஓரங்களில் ஒரு கோவிலைக் கட்ட விரும்பினார். இன்று, இந்த கோயில், முருகனைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரு பெரிய வழிபாட்டுத் தலமாக உள்ளது, போரின் கடவுள் மற்றும் பல திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன, அவற்றில் மிகப்பெரியது தைப்பூசம் காவடி திருவிழா, இது பெரும்பாலும் தென்னிந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
உங்கள் முருகன் ஆலயம்
The Latest News
மொரீஷியஸில் உள்ள இந்து கோவில்
இந்த திராவிட அதிசயம் மொரீஷியஸில் உள்ள இந்து கோவில்களின் பட்டியலில் , வேல் முருகன் என்ற
சென்னை கந்தகோட்டம்_முருகன் வரலாறு
வள்ளலார் பாடிய சென்னை #கந்தகோட்டம்_முருகன் வரலாறு! 17ம் நூற்றாண்டின் தொடக்க
"பேசமுடியாத சென்னை வாலிபர் பேசிய அதிசயம்".
"கந்தசஷ்டி விரதம் இருந்த பேசமுடியாத சென்னை வாலிபர் பேசிய அதிசயம்".....திருச்செந்