கும்மர்ஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சிக்குமரன் ஆலயம்

Sri Kurinchikumaran Temple – Gummersbach

முகவரி & தொடர்பு


Address

Industriestraße 7, 51643 Gummersbach, Germany

GPS

51.0224635, 7.5728912

Telephone


திறந்திருக்கும் நேரம்

தகவல் இற்றைப்படுத்தல்


தாங்கள் இவ்வாலயத்தின் நிர்வாகியா? இங்குள்ள தகவலை இற்றைப்படுத்த விரும்புகின்றீர்களா? பதிவு செய்து இற்றைப்படுத்துங்கள்..

எந்நாட்டவர்க்கும் இறையென்று விளங்கும் பரம் பொருளின் உருவ அருவத் திருமேனியை சிவம் என்று கூறும் வேதாகமங்களின் வழியே ஒப்பில்லாத உண்மைச் சமயமாக விளங்க எண்ணில் கோடி பிறவிகளில் புண்ணிய வசத்தால் மனிதப்பிறவி எடுத்த யாம் வாழ்வு, வறுமை என்ற இரு சிறுமைகள் இன்றி அடக்கம் என்கின்ற பெருமையோடு சமயஞ்சார்ந்து சரியை, கிரியை, யோகம் செய்து அவையின் பயனடைவோம் என்கின்ற ஆன்றோர் வாக்கிற்கமைய சிவபரம் பொருளின் தொன்மை வடிவமான ஆறுமுக வடிவம் தொன்மை நன்மை சேர்ந்த இந்த முகம் அநாதியானது.

ஈசானம் தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், என்னும் ஐந்து திருமுகங்களுடன் கீழ்நோக்கும் அதோ முகமும் சேர்ந்து ஆறுமுகமாகி உயிர்கட்கெல்லாம் தனிப்பெருங் கருணை புரிகிறது.
இத்தகைய எந்தை கந்தனின் இன்னருள் பெற்றவர்கள் பலர். இதன் பயனாய் பல சமுத்திரங்களைக் கடந்து இன்னல்பட்டு ஐரோப்பாக்கண்டம் வந்த யாம் வாழ்வெனும் தொடரில் நின்மதியடைய ஒரேவழியாகும் இருவினையொத்த மலபரிபாகம்,சத்திருபாதம் என்ற மூன்றையும் முறையே அடைந்து பக்குவப்பட்ட ஒருவர் எல்லோரும் தம்மை ப்போலவே இன்பமடைய வேண்டும் என்ற விருப்பில் முருகனை வழிபட மலையும் மலை சார்ந்த இடமாகிய கும்மர்ஸ்பாக்கில் அன்பு மக்களின் ஆதரவோடு இரவு பகல் பாராது அயராது குளிரேதென்றெண்ணாது மிகச் சிரமத்தின் மத்தியில் அரசாங்க அனுமதியுடன் குறுகிய காலத்தில் முடிந்தளவு ஆகமப் பிரமாணங்களுடன் திரு.ஞானசேகரம் அவர்களால் மரவேலைப்பாடுகளுடன் தூபி அமைத்து வர்ணகலாபம் திரு.மு.கிருபாகரன் அவர்களது அழகிய வர்ண வேலைப்பாடுகள் ஓவியங்களுடன் இந்த கும்மர்ஸ்பாக் நகரிற்கே பெருமை தேடித் தருமளவிற்கு எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் குறிஞ்சிக்குமரன் ஆலயம் 02.06.1993 ம் ஆண்டு கனடாவில் வாழும் கும்பாபிஷேக பிரதானசிவாச்சாரியார்;,
திருகோணமலை வில்லூன்றிக் கந்தன் ஆலய பிரதமகுரு
முன்னாள் மட்டக்களப்பு சிவாநந்த மத்திய மகா வித்தியாலய
இந்துநாகரீக சமஸ்கிருத விரிவுரையாளர்
வியாகரண சிரோன்மணி சிவஸ்ரீ. பூரண.தியாகராஜக் குருக்கள் BA Hons Ceyஆலய பிரதம குருவாக விளங்கும்,

தற்புருஷ சிவாச்சார்யார் – கிரியாஞானஜோதி
சிவஸ்ரீ.கணேச.சாமிநாதக் குருக்கள்,
சாதகாச்சார்யார்
சைவாகம சாதக குருமணி
அண்ணாசாமிக் குருக்கள் தெய்வேந்திரக் குருக்கள்,
அலங்கார சிவாச்சார்யார்
சிவஸ்ரீ.இராம.மகேஸ்வரக் குருக்கள்
உதவிக் குருமார்
சிவாச்சார்யச் செல்வன்.பிரம்மஸ்ரீ.சோமாஸ் துளசிகாந்தசர்மா,
சிவாச்சார்யமணி.சோமாஸ் ஸ்ரீகரக்குருக்கள்
பிரம்மஸ்ரீ.ச.ரங்கநாத சர்மா
பிரம்மஸ்ரீ.பிரபாகரசர்மா,
பிரம்மஸ்ரீ.கணேச.சிவசுத சர்மா
பிரம்மஸ்ரீ.சாமி.சக்தீதரசர்மா
மற்றும் பல அந்தணப் பெருமக்கள் கலந்து கொண்டு ஆகம முறைப்படி கும்பாபிஷேகப் பெருஞ்சாந்தி விழா வைபவம் வெகு விமர்சையாக இடம் பெற்றது.
மீண்டும் புதிய இடத்தை வாங்கி அதிலே ஆலயம் அமைக்க அரிய முயற்சி செய்து அனைத்து அடியார்களின் முழு ஒத்துழைப்போடு ஜேர்மனியில் கும்மர்ஸ்பாக் என்னும் திவ்யஷேத்திரத்தில் கலியுக வரதனும், கண்கண்ட தெய்வமும்,தமிழ்க் கடவுளுமாகிய முருகப்பெருமான் மலையும் மலைசார்ந்த பிரதேசமான குறிஞ்சி நிலமூர்த்தியாக எழுந்தருளியிருந்து தம்மை இறைஞ்சி வேண்டுவார்க்கெல்லாம் இன்னருள் புரிகின்ற எல்லாம் வல்ல குமரப்பெருமானுக்கு புதிய சொந்தமான காணிக் கட்டிடத்தில் மாபெரும்
திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு துவிதள விமானத்தோடு கூடிய கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபத்துடன் பஞ்சமூர்த்திகளாக மூலவர்,உற்சவர்,ஆறுமுகர்,சோமாஸ்கந்தர், தண்டாயுதபாணி ஆகிய மூர்த்தங்களோடு ஆலயம் அமைக்கப்பட்டு விநாயகர், சிவன், அம்பிகை, கிருஷ்ணர், நாகபூஷணி, முப்பெருந் தேவியர்(துர்க்கா,லக்சுமி,சரஸ்வதி), நடராஜர், நவக்கிரகங்கள், பைரவர், மயூரம், பலிபீடம், கொடிஸ்தம்பம், கொடிஸ்தம்பப் பிள்ளையார், உற்சவ மூர்த்திகளுக்குரிய சபை, நவவீரர், சண்டேஸ்வரர் ஆகிய பரிவார ஆலயங்களும், வசந்தமண்டபம், அழகிய மணிக் கூண்டுக்கோபுரம், கல்யாண மண்டபம், ஈழநல்லூர் முருகன் ஆலய முகப்பு மணிமண்டப அமைப்புடன் முருகன் கல்யாணக் காட்சியுடன் கூடிய நுழைவாயில், உள்வீதியில் அழகிய சிற்ப வேலைகளுடன் கூடிய தூண்கள், அழகிய வர்ண ஓவியங்களுடன் அதி சிறந்த பளிங்குக் கற்கள் பதித்த அழகுமிகு திருக்கோவில் அமையப் பெற்று ஸ்வஸ்தி ஸ்ரீ சுப மங்களகரமான வியவருடம் உத்தராயணம்,கிரிஸ் மருது, ஜயேஸ்ட (ஆனி மாதம்) பதினெட்டாம் நாள் (02.07.2006) ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை ஸப்தமிதிதி, ஆனி உத்தர நட்சத்திரம்,அமிர்தயோகம், கன்னி லக்னம் ஆகியன ஒருங்கே அமையப் பெற்ற 12.15 முதல் 13.00 மணிவரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் திருவருளும், குருவருளும் துணை நிற்க ஸ்ரீ வள்ளீ தேவசேனா சமேத குறிஞ்சிக்குமரப் பெருமானுக்கும், விநாயகர், சோமாஸ்கந்தர், தண்டாயுதபாணி, உற்சவர், ஷண்முகர், சிவலிங்கம், அம்பிகை, சந்தான கிருஷணர், ஏனைய உற்சவமூர்த்திகள், நாகபூஷணி, முப்பெருந்தேவியர், சிவகாமி அம்பாள் சமேத ஆனந்த நடேசர், மணிவாசகர், சந்திரசேகரர், மயூரம், பலிபீடம், கொடி ஸ்தம்பம், கொடிஸ்தம்பப் பிள்ளையார், நவக்கிரகங்கள், சனீஸ்வரப்பெருமான், பைரவர், நவவீரர், சண்டேஸ்வரர், சூரியசந்திரர் ஆகிய பரிவார மூர்த்தங்களுக்கும் மஹாகும்பாபிஷேகம் என்னும் குடமுழுக்கு நடைபெற்றது.                                                                                                                                                                                                                               சர்வபோதகாச்சாரியார் ‘சிவாகமகிரியாஜோதி’ பிரதிஷ்டா ரெத்தினம்
சிவஸ்ரீ.க.குகதாசக்குருக்கள் அவர்கள்
புங்குடுதீவு கிழக்கு தல்லைப்பற்று முருகன் ஆலயம் ஆனைக்கோட்டை
உயரப்புலம் வராகி அம்பாள் ஆலயம் ஆகியவற்றின் பிரதமகுருவும்
இலங்கையின் பல ஆலயங்களின் கும்பாபிஷேக, மகோற்சவ குருவும் இலங்கை.
சர்வசாதகாச்சார்யார் கானவினோதன் சங்கீத ஞானசாகரம் சாதகவிற்பனர்
சிவஸ்ரீ சோம வரதராஜக்குருக்கள் அவர்கள்
வேலணை புளியங்கூடல் இந்தன் பிள்ளையார் ஆலய பிரதமகுருவும் பல ஆலயங்களின் கும்பாபிஷேக மஹோற்சவ குருவும் இலங்கை.
பிரதிஷ்டா பிரதமசிவாச்சார்யார் சிவாச்சார்ய திலகம் சிவாகம கிரியா பூஷணம் வைதீக கிரியா ரத்னம்
சிவஸ்ரீ.ந.மகேஸ்வரக்குருக்கள் அவர்கள்
வேலணை வங்களாவடி முருகன் ஆலய பிரதமகுருவும்,
பல ஆலயங்களின் கும்பாபிஷேக மஹோற்சவ குருவும் கொழும்பு இலங்கை
கும்பாபிஷேக கிரியா ஒழுங்கு நெறியாள்கை சேவை கிரியாஞானமணி கிரியா திலகம்
சிவஸ்ரீ கணேச.சண்முகதாஸக்குருக்கள் அவர்கள் லண்டன்
ஆலய பிரதமகுரு கிரியாஞான ஜோதி சிவாகம கிரியா பூஷணம்
சிவஸ்ரீ கணேச.சாமிநாதக் குருக்கள்
அவர்கள் குமர்ஸ்பாக் ஜேர்மனி.சிவாச்சார்யமணி அலங்கார பூஷணம்
சிவஸ்ரீ சி.ஆனந்த ரெத்தினக்குருக்கள் அவர்கள்
ஐயப்பன் ஆலய பிரதமகுரு லாப்பிளான் பிரான்ஸ்
சிவாகமகானபூஷணம் முத்தமிழ்ச்செல்வன்
சிவஸ்ரீ.நா.கஜேந்திரகுருக்கள் அவர்கள்
கூர் நவசக்தி விநாயகர்
ஆலயம் லுகானோ சிவசுப்பிரமணியர் ஆலய பிரதமகுரு சுவிஸ்.
சிவாகமகிரியாரத்னா சாதகசிரோன்மணி
சிவஸ்ரீ கிருஷ்ண பங்குசக்குருக்கள் அவர்கள்
ஒஸ்லோ சிவசுப்ரமணிய ஆலயபிரதம குரு நோர்வே.
சிவாச்சார்யரத்னம் அலங்கார நுண்மணி
சிவஸ்ரீ கனக பாலகுமாரக்குருக்கள் அவர்கள்
ஈலிங் கனகதுர்க்கா அம்பாள் ஆலயம் லண்டன்
சிவாகமபூஷணம் கிரியாரெத்தினம்
சிவஸ்ரீ.ச.ருத்ரானந்தக்குருக்கள் அவர்கள்
லிம்பேர்க் முருகன் ஆலய பிரதமகுரு ஹொலண்ட்
சிவாச்சார்யமணி சிவாகம பூஷணம்
சிவஸ்ரீ த.சுப்ரமணியக்குருக்கள் அவர்கள்
கேர்ணிங் சித்திவிநாயகர் தேவஸ்தானம் டென்மார்க்
பிரம்மஸ்ரீ குமார திவாகரசர்மா அவர்கள்
நீர்வேலி இலங்கை
பிரம்மஸ்ரீ.சாமி.சக்தீதரசர்மா அவர்கள்
ஆகம விதிகளுக்கமைய ஆலய அமைப்பு-மண்டப அமைப்பு-
நிர்மாண செயற் திட்டம்
சிற்பகலாரத்தினம்- சிந்தனைச்சிற்பி சைவத்திரு.த.தவவீரசிங்கம்
அராலி தெற்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம்
ஆலய நிர்மாண வேலைகள் – வர்ணவேலை சிற்பக்கலைஞர் சைவத்திரு.க.அருந்தவநாதன் ஸ்தபதி அவர்கள்
நவாலி மானிப்பாய் யாழ்ப்பாணம்.
கற்பக்கிரக பரிவார ஆலயங்கள் ஏனைய
சிற்பவேலைப்பாடுகள் ஓவியவர்ண வேலை,செயற்திட்டம்
ஓவியச்செல்வன் கலாரத்னா கலைஞானவித்தகர்
சைவத்திரு.மா.தர்மகுமார் ஸ்தபதி அவர்கள்
கோண்டாவில் யாழ்ப்பாணம்
பூச்சுவேலை வரிவடிவமைப்பு நுட்பக்கலை மெருகூட்டல் சிற்பச் செல்வன் சைவத்திரு.பொன்.அகிதரன் ஸ்தபதி அவர்கள்
அராலி தெற்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம்
ஸ்தபதிகள் ஒழுங்கு உதவி.
சைவத்திரு.வி.இராஜகுமார் பிலபெல்ட் ஜேர்மனி

சிலாவிக்கிரகங்கள்
விஸ்வப்பிரம்மஸ்ரீ:-நாச்சிமுத்து அவர்கள்
சபரி திருப்பூர் இந்தியா
தாம்பிர விக்ரகங்கள்:-
விஸ்வப்பிரம்மஸ்ரீ.எஸ்.வாசுதேவன் சிற்பி அவர்கள்
சாமிமலை கும்பகோணம் இந்தியா
ஏற்றுமதி ஒழுங்குகள் :-
பிரம்மஸ்ரீ.எஸ்.ஸ்ரீராம் சர்மா அவர்கள் திருச்சி இந்தியா.

ஆலயகுருவாக திகழ்பவர் சிவசிறீ.பஞ்சாட்சர குருவாயுரக்குருக்கள்

Leave a review

Your email address will not be published. Required fields are marked *