Radius: Off
Radius: km
Set radius for geolocation
blog-title Blog

Blog

ஆண்டவன் பிச்சி

24 ஆண்டுகள் கடந்தன..பெட்டிக்குள்இருந்த ரூபாய் நோட்டுகள் செல்லரிக்கப்பட்டன..ஆனால் முருகனைப் பற்றியபக்திப் பாடல்கள் செல்லரிக்கப் படாமல்அப்படியே நன்றாக இருந்தன… ஆண்டவன் பிச்சி (ஆண்டவன் பிச்சைஎன்பாரும் உளர்) என்று மகாபெரியவர்பெயர்சூட்ட அப்பெயராலேயே அறியப்பட்டவர் மரகதம் என்ற உத்தமி.உள்ளம் உருகுதய்யா என்ற புகழ்மிக்க பாடலைப் பாடியருளியவர் இவர்.( உள்ளம் உருகுதடா என்று ஆண்டவன்பிச்சி உரிமையுடன் பாடிய பாடலை ,TMSஉள்ளம் உருகுதய்யா என்று மாற்றிப்பாடினார்)சின்னஞ்சிறு வயதிலேயே முருகப்பெருமானால் உபதேசம் செய்யப்பட்டார். பாடல் புனையும் ஆற்றல் பெற்றார்.ஓதாது உணர்ந்தார். வடமொழிப்புலமையும் பெற்றார்.வடமொழியில்,முருகனை உபாசிப்பதற் கேற்ற […]

read more

மொரீஷியஸில் உள்ள இந்து கோவில்

  இந்த திராவிட அதிசயம் மொரீஷியஸில் உள்ள இந்து கோவில்களின் பட்டியலில் , வேல் முருகன் என்ற இந்தியத் தொழிலாளியின் யோசனையின் காரணமாக,1907 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.  அவர் கார்ப்ஸ் டி கார்ட் மலையின் ஓரங்களில் ஒரு கோவிலைக் கட்ட விரும்பினார். இன்று, இந்த கோயில், முருகனைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரு பெரிய வழிபாட்டுத் தலமாக உள்ளது, போரின் கடவுள் மற்றும் பல திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன, அவற்றில் மிகப்பெரியது தைப்பூசம் காவடி திருவிழா, இது பெரும்பாலும் தென்னிந்தியாவில் […]

read more

சென்னை கந்தகோட்டம்_முருகன் வரலாறு

வள்ளலார் பாடிய சென்னை #கந்தகோட்டம்_முருகன் வரலாறு!   17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த வரலாறு இது. ஒரு கோயிலில் உற்ஸவர் சிலை செய்ய வேண்டும் என்று நிர்வாகத்தினர் விரும்பினர். சிற்ப வல்லுனர்கள் மூலம்,பஞ்சலோகத் திருமேனி வார்க்கப்பட்டது.   வார்ப்படச் சூடு அடங்கும் முன், சிலையை வெளியே எடுக்கப்பட்டது. தகதகவெனப் பிரகாசித்தது சிலை, இருந்தாலும் அங்கும், இங்குமாக பிசிறுகள் நீட்டிக் கொண்டிருந்தன. அவற்றை நீக்கி தூய்மை செய்யலாம் என்ற எண்ணத்தில், தலைமை சிற்பி வந்த போது, உடம் பெங்கும் […]

read more

“பேசமுடியாத சென்னை வாலிபர் பேசிய அதிசயம்”.

“கந்தசஷ்டி விரதம் இருந்த பேசமுடியாத சென்னை வாலிபர் பேசிய அதிசயம்”…..திருச்செந்தூரில் கந்த சஷ்டி விரதம் இருக்கும் வாய் பேச முடியாத சென்னையை சேர்ந்த வாலிபர் பேசிய அதிசயம் நிகழ்ந்துள்ளது.(year 2016) சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்தவர் பாலாஜி (30). பிறவியிலிருந்து வாய் பேச முடியாமல் இருந்து வருகிறார். இவர் அங்குள்ள #சிவன் கோயிலில் 108 வயதான முதியவரும், #ஐயப்ப குருகுல சுவாமியுமான ஒருவருக்கு பணிவிடை செய்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டியையொட்டி திருச்செந்தூருக்கு வரும் பாலாஜி கோயில் பிரகாரத்தில் […]

read more

செல்வாய் சீன மண்ணை நோக்கி..

செல்வாய் சீன மண்ணை நோக்கி……………..,,,,, வெல்வாய் அந்த கொரோனோசை!!!!!!!!!!! வானம் வந்து கவிழ்ந்து உன்னை கானம் கொண்டு வணங்குதே! தானம் என்ன தாளம் என்ன தந்தேன் எனது நெஞ்சையே!! சொல்வதிங்கே யான் என்றாலும் சொல்லவைப்பது நீ அன்றோ வெல்வதிங்கே யாம் என்றாலும் வெல்லவைப்பதும் நீ அன்றோ!!!! கொன்று ஒழியும் நோயாம் அது கொறோனோ வைரசாம்!! சின்னம் சிறு உயிர் எல்லாமும் சிந்தை கலங்கி நிற்குதே!! வெந்தமானுடர் உடலைக்காக்க வேல்பிடித்து வந்தேயானால்!!! சீனம் உந்தன் சிறப்பை நாளும் செப்பிவிட்டு […]

read more

கள்ளமாய் சிரித்ததேனோ!!!

உள்ளத்தே உன்னை வைத்து உலகமே நீ தான் ஆக செல்வனே உந்தன் சிரிப்பு சிந்தை கவர்ந்ததையா!!!   கந்தனே உன்னை யானும் கடுகியே வணங்கையிலே, கள்ளமாய் சிரித்ததேனோ!!! தெள்ளமாய் தெரிந்ததையா??   மாயமோ மந்திரமோ இது  என் மனதை  ஆளும் விந்தையன்றோ காயமே போகும்போதும் என் கற்பனைஉள்  வந்ததேனோ! முருகா !!முருகா!! sri bava                          

read more

கந்தரனுபூதியின் மகிமை

கந்தர் சஷ்டி விரதம் ஸ்பெஷல் !   வறுமையில் வாடிய முருகனடியார் ஒருவர் தினமும், அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதியை பாராயணம் செய்து வந்தார்.இருந்தாலும் வறுமை நீங்கவில்லையே… என வருந்தினார். செல்வ வளம் பெற, லட்சுமி குறித்த வேறு நுாலை பாராயணம் செய்ய வேண்டுமோ? என்ற சந்தேகம் எழுந்தது.அதை தீர்க்க விரும்பிய அடியவர், காஞ்சிபுரம் புறப்பட்டார். பரமாச்சாரியாரை தரிசித்தார்.   ”சுவாமி…. எனக்கு இப்போது, முதல் தேவை பணம் தான். கடன் சுமையால் கஷ்டப்படுகிறேன். வட்டி கட்டமுடியவில்லை. கந்தர் […]

read more

பஞ்சாமிர்த வண்ணம்

சிறீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் (Panchamirthavannam lyrics) . முருகப்பெருமானுக்கு மிகவும் விருப்பமானது. முருகப்பெருமானே, இப்பாடல் பாராயணம் செய்யும் இடங்களில் வருவேன், இருப்பேன் என்று கூறியதாக வரலாறு. இப்பாடலை நாளும் பாராயணம் புரிந்தால், முருகனருள் எளிதில் கிடைப்பது உறுதி.   பாகம் 1 – பால் சுப்பிரமணிய பெருமான் சூரபத்மனுடன் போரிடும் மகிமை. முருகனின் போர் வெற்றி குறித்து ஜெயகோஷம். பிணிபோக்க விண்ணப்பம். 1 – 1 இலங்கு நன்கலை விரிஞ்சனோடு அனந்தனும் சத மகன்சதா […]

read more

கந்தசட்டி கவசம் – திருவாவினன்குடி

திருவாவினன்குடி சிறக்கும் முருகா குருபரா குமரா குழந்தைவே லாயுதா சரவணை சண்முகா சதாசிவன் பாலா இரவலர் தயாபரா ஏழைபங் காளா பரமேஸ் வரிக்குப் பாலா தயாபரா வரமெனக் (கு) அருள்வாய் வாமனன் மருகா இரண்டா யிரம் வெள்ளம் யோகம் படைத்தவா திரண்டா ருகமனம் தீர்க்கம் படைத்தவா இலட்சத்திருநான்கு நற்றம்பி மாருடன் பட்சத்துடனே பராசக்தி வேலதாய் வீர வாகு மிகுதள கர்த்தனாய் சூர சங்காரா துஷ்ட நிஷ்டூரா கயிலாய மேவும் கனக சிம்மாசனா மயிலேறும் சேவகா வள்ளி மனோகரா […]

read more

கந்தசட்டி கவசம் – திருப்பரங்குன்றம்

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா குறுக்குத்துறையுறை குமரனே அரனே இருக்கும் குருபரா ஏரகப்பொருளே வையாபுரியில் மகிழ்ந்து வாழ்பவனே ஒய்யார மயில் மீது உகந்தாய் நமோ நமோ ஐயா குமரா அருளே நமோ நமோ மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ பழநியங்கிரிவாழ் பகவா நமோ நமோ மழுவுடை முதல்வன் மதலாய் நமோ நமோ விராலிமலையுறை விமலா நமோ நமோ மராமரம் துளைத்தோன் மருகா நமோ நமோ சூரசங் காரா துரையே நமோ நமோ […]

read more
Testimonials  |  Info: There are no items created, add some please.