தலவரலாறு:இங்கிலாந்தில் உள்ள ஈஸ்ட் மிட்லண்ட்ஸ் மாகாணத்தின் லிசெஸ்டர் நகரில் அமைந்துள்ள அழகிய ஆலயம் அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலயம் ஆகும். இப்பகுதியில் உள்ள தொண்டு நிறுவனத்தினரால், லிசெஸ்டர் வாழ் தமிழ் சமூகத்தை சேர்ந்த ஆன்மிக பக்தர்களுக்காக கட்டப்பட்டதே ஸ்ரீ முருகன் கோயிலாகும். மிகுந்த சிரமங்களுக்கு இடையே, தொண்டு நிறுவன நிர்வாகிகளின் கடும் உழைப்பால் இக்கோயில் உருவாக்கப்பட்டது.
இப்பகுதியில் தமிழ் குடும்பங்கள் அதிக அளவில் வசித்து வந்ததால், தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான், இக்கோயிலின் முக்கிய தெய்வமாக பிரதிஷ்டை செய்யப்பட்டார். இக்கோயிலுக்கென பிரத்யேக புரோகிதர் நியமிக்கப்பட்டு, மூன்று கால பூஜைகள் நடத்தப்படுகிறது. தினசரி பூஜைகளும், திருவிழாக்களும் தவறாது கொண்டாடப்பட்டு வருகின்றன.
கோயில் நேரங்கள்: காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை; மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
வெள்ளிக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை; மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை.