உந்தன் படைப்பிலே வந்ததோ

எத்தனை கோடி கொடுமை வைத்தாய் 
இறைவா! இறைவா! இறைவா! இறைவா!
அத்தனையும் உந்தன் படைப்பிலே வந்ததோ!
அத்தனையும் உந்தன் படைப்பிலே வந்ததோ!
எத்தனை கோடி கொடுமை வைத்தாய்! இறைவா!

புத்தினுள்ளே வரும் பாம்பை போல
வித்தகமாய் பல மனிதர்கள்!
சத்தியங்கள் ! தர்மங்கள் !
தோற்றது இங்கே!
எத்தனை கொடுமை வைத்தாய்
இறைவா ! இறைவா!

பக்தர்கள் போல் நடிக்கும் பாதகர்கள்!
பசுக்களைப் போல் நடிக்கும் சாதுக்கள்!
சொத்துக்களே பெரிதான சொந்தங்கள்!
செத்தபின் வரும் எனும் எண்ணங்கள்!
எத்தனை கொடுமை
வைத்தாய் இறைவா! இறைவா!

பணத்தினையே இவர் கடவுள் என்பர்!
குணத்தினை நாளும் மதித்திருக்கார்!
பள்ளத்திலே வீழ்ந்த விட்ட குருடரைப்போல்
கண்கள் இழந்த மானிடர்கள்!
கண்கள் இழந்த மானிடர்கள்!
எத்தனை கோடி கொடுமை
வைத்தாய் இறைவா! இறைவா!

ஏழைகள் தனையே ஏன் படைத்தாய்! நீ
ஏழைகள் தனையே ஏன் படைத்தாய்?
வாழவும் இன்றி சாகவும் இன்றி 
அடிமைகளாய் !அனாதைகளாய்!
வாழ்கின்றார் பார்!
எத்தனை கோடி கொடுமை
வைத்தாய் இறைவா! இறைவா!

முருகன் கவிதைகள்

Sri Bava

Sri Bava

Leave a Replay