அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில் : செங்கம், வில்வாரணி

Nakshatra Giri Murugan temple

முகவரி & தொடர்பு


Address

Villvarani Murugan Temple Tamil Nadu 606906

GPS

12.4456598, 79.0562077


திறந்திருக்கும் நேரம்

தகவல் இற்றைப்படுத்தல்


தாங்கள் இவ்வாலயத்தின் நிர்வாகியா? இங்குள்ள தகவலை இற்றைப்படுத்த விரும்புகின்றீர்களா? பதிவு செய்து இற்றைப்படுத்துங்கள்..

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், வில்வாரணி ஊரில் அமைந்துள்ள சுமார் 500-1000  ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலம், இங்கு மூலவரின் பெயர் சுப்பிரமணியர், சுயம்பு மூர்த்தியாக லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். ஆடி கிருத்திகை மற்றும் இதர கிருத்திகை நாட்கள் இங்கு விழாக்கோலம் தான். பங்குனி உத்திரம் பத்து நாள் நடக்கிறது. ஐந்தாம் நாளில் முருகன் மலையில் இருந்து கீழிறங்கும் நிகழ்ச்சி நடக்கும். ஏழாம் நாளில் தேரோட்டம் நடக்கிறது. இதற்காக 16 லட்சம் ரூபாய் செலவில் தேர் உருவாக்கப்பட்டுள்ளது.

 அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், செங்கம், வில்வாரணி – திருவண்ணாமலை மாவட்டம்.

மூலவர் சுப்ரமணியர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் செங்கம், வில்வாரணி
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

சிவன் தான் லிங்க வடிவில் காட்சியளிப்பார். ஆனால், சிவனும் முருகனும் ஒன்றே என்பதை நிரூபிக்கும் வகையில் இங்கு லிங்க வடிவ சுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார். ஜாதகரீதியாக ராகு, கேது தோஷமுள்ளவர்கள் இந்த முருகனை வழிபட்டு துன்பம் நீங்கி இன்ப வாழ்வு பெறுவர் என்பது நம்பிக்கை. சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலப்பெருமை:

நெருப்பு சிவன். அதிலுள்ள வெப்பம் உமாதேவி, நெருப்பின் நிறம் கணபதி, அதன் ஒளி முருகன். இவையாவும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை என்றும், லிங்க வடிவில் முருகன் தோன்றியதால், சிவனே முருகன், முருகனே சிவன் என்றும் இந்த கோயில் மூலம் உணர முடிகிறது. ஒவ்வொரு கிருத்திகையன்றும் 27 நட்சத்திரங்களும், கார்த்திகை பெண்களும் இங்கு வந்து முருகனை வழிபடுவதாகவும் நம்பிக்கை உள்ளது.

தல வரலாறு:

பல ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் இருந்த கோயில் குருக்கள் ஒருவர் பல கோயில்களுக்கு பூஜை செய்து வந்தார். வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு குதிரையில் சென்று வருவார். அவர், தன் சக குருக்கள் ஒருவருடன் ஆண்டுதோறும் ஆடி கிருத்திகையன்று திருத்தணி சென்று முருகனை வழிபடுவார். ஒரு ஆண்டில் சில காரணங்களால் அங்கு செல்ல இருவருக்கும் தடங்கல் ஏற்பட்டது. இதனால் மனம் நொந்த அவர்கள் அன்றிரவு உறங்கும் போது, இருவர் கனவிலும் தோன்றிய முருகன், “”நான் நாக வடிவில் சுயம்புவாக நட்சத்திர மலையில் எழுந்தருளியுள்ளேன். எனக்கு அந்த இடத்தில் கோயில் கட்டி கிருத்திகை நட்சத்திரங்களில் வழிபாடு செய்யுங்கள்,” என கூறினார்.

மறுநாள் முருகன் குறிப்பிட்ட மலையில் சுயம்புவைத் தேடினர். அங்கே முருகன் குறிப்பிட்டபடி லிங்கம் ஒன்று கிடந்தது. அதை ஒரு நாகம் பாதுகாத்துக் கொண்டிருந்தது. குருக்களைக் கண்டதும் நாகம் லிங்கத்திற்கு குடைபிடித்த நிலையில் சிலையாகி விட்டது.

குருக்கள் இருவரும் சிறு கொட்டகை அமைத்து லிங்கத்தை முருகனாக கருதி வழிபட்டனர். காலப்போக்கில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் சிலையும் வைக்கப்பட்டது. நாகம் வடிவெடுத்து சுப்பிரமணியருக்கு நிழல் தந்ததால், நாகத்தின் கீழ் சுப்பிரமணியர் இருப்பது போல் சிலை வடிக்கப்பட்டது.

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி: அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், செங்கம், வில்வாரணி – திருவண்ணாமலை மாவட்டம்

இருப்பிடம் :
திருவண்ணாமலையில் இருந்து போளூர் செல்லும் பஸ்களில் 35 கி.மீ., தூரம் அல்லது வேலூரில் இருந்து 45 கி.மீ., பயணம் செய்து போளூரை அடைந்து, அங்கிருந்து செங்கம் செல்லும் பஸ்களில் 10 கி.மீ., தூரம் சென்றால் வில்வாரணியை அடையலாம். பஸ்ஸ்டாப் அருகிலேயே கோயில் உள்ளது. கோயிலுக்கு செல்ல 300 படிகள் ஏற வேண்டும்.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருவண்ணாமலை

அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை

 

Leave a review

Your email address will not be published. Required fields are marked *