நெற்றித்தீப்பொறியின்
பொய்கையில் மலர்ந்தவா!
அன்னையின் கைபட
ஆறுமுகமானவா!
வைகாசியின் விசாகா!
வாழ்த்துகிறேன் உம்மையே!
இறைவா!! முருகா!!!
நலம் வாழ என்றே
வாழ்த்துகிறேன் உம்மையே!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சங்கரன் புதல்வா!!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பார்வதி மைந்தா!!!
நின்னை வாழ்த்த
எனக்கொரு நாளாம்
என்ன பேறு பெற்றேன்
வள்ளி மணவாளா!
உன்னை வாழ்த்துவதால்!
நான் ஒரு கடவுள் அல்ல!!!!
அன்பிலே ஊறிய -உந்தன்
அடிமை யான் அன்றோ!!!!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்