ஆலய வரலாறு : அருள்மிகு திருத்தணிகை வேல்முருகன் ஆலயம், லண்டனுக்கு அருகில் உள்ள சுர்ரே பகுதியை அடுத்த நியூமோள்டனில் அமைந்துள்ள சிறிய ஆலயமாகும். தமிழகத்தில் அமைந்துள்ள முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிகை(திருத்தணி) மலையின் கோயிலை போன்றே இவ்வாலயமும் அமைதியும், மனதிற்கு ஆறுதலும் தரும் சூழலில் அமைந்துள்ளது. கோயிலின் அமைப்பு, சிற்ப வேலைப்பாடு, பக்தர்கள் வழிபாடு உள்ளிட்ட
பலவிதங்களில் ஸ்ரீ திருத்தணிகை வேல்முருகன் ஆலயம், தமிழகத்தின் திருத்தணிகை மலை முருகன் கோயிலை ஒத்திருக்கிறது. ஸ்ரீ திருத்தணிகை வேல்முருகன் ஆலயம், 2003ம் ஆண்டு சுர்ரே நகரின் புறநகர் பகுதியில் தற்காலிக ஆலயமாக அமைக்கப்பட்டது. பின்னர் ஆலய நிர்வாகிகளின் கடின உழைப்பு மற்றும் முருகப் பெருமானின் திருவருளால் நியூமோள்டன் பகுதியில் ஆலயத்திற்கான நிரந்த இடம் வாங்கப்பட்டு, ஆலயம் எழுப்பப்பட்டது. ஏராளமான பக்தர்களின் உதவியால் தற்போதுள்ள ஆலயம் கட்டப்பட்ட 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.
ஆலய நேரம் :
திருங்கள் முதல் வியாழன் வரை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்துள்ளது. வெள்ளிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9.30 வரையிலும் திறந்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்துள்ளது.