பெர்த் ஸ்ரீ பால முருகன் கோவில்

Perth Bala Murugan Temple

முகவரி & தொடர்பு


Address

12 Mandogalup Road Mandogalup Western Australia 6167

GPS

-32.207607021428, 115.84335785766

Telephone


திறந்திருக்கும் நேரம்

தகவல் இற்றைப்படுத்தல்


தாங்கள் இவ்வாலயத்தின் நிர்வாகியா? இங்குள்ள தகவலை இற்றைப்படுத்த விரும்புகின்றீர்களா? பதிவு செய்து இற்றைப்படுத்துங்கள்..

மேற்கு ஆஸ்திரேலியாவில் பல சமூகத்தைச் சார்ந்த பலமொழிகளைப் பேசும் இந்துக்கள் அனைவரும் கூட்டாக வழிபடும் ஓர் இந்து ஆலயத்தைத் தவிர தமிழகத்திலிருந்தும் தாயகத்திலிருந்தும் வருகைதந்து இங்கு வாழ்ந்துவரும் சைவத்தமிழ் மக்கள் தமது பண்டைய தமிழ் கலாச்சாரத்தையும் சைவசமயக் கலாச்சாரத்தையும் பேணிப் பாதுகாப்பதற்கெனத் தனியாக ஆலயம் எதுவும் இல்லாதது பலரின் மனதில் நீண்டகாலமாக பெங்குறையாக இருந்துவந்தது. இவர்களின் மனக்குறையை நீக்க தமிழ் கடவுளாகிய முருகன்

திருவுளங்கொண்டான். இதனால் பேர்த் வாழ் சைவத்தமிழ் மக்களில் பலர் ஒன்றுசேர்ந்து மேற்கு அவுஸ்திரேலிய சைவமஹாசபை என்னும் பெயரால் முற்று முழுதாக சைவத்தையும் தமிழையும் கலையையும் கலாச்சாரங்களையும் வளர்க்கும் நோக்குடன் ஒரு ஸ்தாபனம் நிறுவப்பட்டது. இதன் முதல் முயற்சியாக கலியுகத்தும் கருணைவரங்களை அருளும் கலியுகவரதனாகிய ஸ்ரீ பாலமுருகனைப் பிரதானமாகக் கொண்டு சிவன் முதலான அனைத்து தெய்வங்களையும் பரிவாரங்களாகக் கொண்ட முழுமையான தேவஸ்தானமாக ஒரு கோவில் அமைக்கக் தீர்மானிக்கப் பட்டது. இதற்குப் பூர்வாங்கமாக மண்டோகளப் சமூக மண்டபத்தில் பிரதி ஞாயிறு தோறும் பேர்த் வாழ் சைவத்தமிழ் மக்களின் ஒன்றுகூடலும் முருகவழிபாடும் சிலகாலம் நடைபெற்று வந்தது.

சமூக மண்டபத்தில் முதலாவது ஸ்கந்தசஷ்டி

சில மாதங்களில் அனைவருக்கும் ஏற்பட்ட ஆர்வத்தினாலும் பெர்த்திற்கு அவ்வப்போது வருகைபுரிந்த அருளாளர்களின் ஆசியினாலும் இந்தியாவிலிருந்து விநாயகர், வள்ளிநாயகி தெய்வநாயகியுடன் செல்வ முத்துக்குமரசுவாமி ஆகிய உற்சவ மூர்த்திகள் வெகு விரைவில் தருவிக்கப் பட்டு அவற்றுக்கு முறைப்படி பிராணப்பிரதிஷ்டையும் நடைபெற்று ஆறு தினங்களுக்கு ஸ்கந்தசஷ்டிப் பெருவிழா, சூரசம்ஹார விழா திருக்கல்யாண விழா ஆகியன வெகு விமரிசையாக சமூக மண்டப வளாகத்திலேயே நடைபெற்றது.

மயில் வந்த அதிசயம்

அப்பகுதியில் தமிழர் சமுதாயத்தினர் கோவில் அமைப்பதற்கும் குடியமர்வதற்கும் அப்பகுதி பாராளுமன்றப் பிரதிநிதியாகிய அவர்களும் பெரிதும் ஒத்துழைப்பு நல்கினார். மேற்படி விழா நாட்களில் மண்டக்களப் சமூக மண்டபத்தின் அருகாமையில் வசிக்கும் ஒரு அவுஸ்திரேலிய அன்பரும் தவறாது வந்து கலந்து கொள்வார். அவர் பலவருடங்களுக்கு முன்பதாகவே மயிலோடு காட்சிதரும் ஸ்ரீ பாலமுருகனின் உருவப்படத்தை தமிழ் நாட்காட்டியாகிய காலண்டரில் பார்த்து இந்தக் கடவுளைப் பற்றி ஆங்கிலத்தில் வாசித்துத் தெரிந்து கொண்டு தமிழர்களின் பக்தி, கலாச்சாரம் இவைபற்றி மனதில் உயர்ந்த அபிப்பிராயம் கொண்டாவராக விளங்கினார். அவர் பலவருடகாலமாக தாவர உணவு உட்கொண்டு வருபவர் எனவும் அப்பகுதியில் பல ஏக்கர் காணிநிலத்திற்கு உரிமையாளர் என்பதுவும் பின்னர் தெரியவந்தது. அவ்வேளையில் சைவமஹாசபையினர் அவரிடமிருந்து கோவிலமைப்பதற்கு நிலத்தை விலைக்குத் தருமாறு கேட்டபோது முதலில் மறுத்துவிட்டார். ஆயினும் அன்றிரவு அவரது கனவில் முருகன் வேலுடனும் மயிலுடனும் காட்சியளித்ததுடன் மறுநாள் மத்தியான வேளையில் அவரது காணியில் எங்கிருந்தோ ஒரு மயில் பறந்துவந்து தோகையை விரித்து வெகுநேரமாக ஆடிக்கொண்டு நின்றதை அவரும் அவருடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவுஸ்திரேலியர் பலரும் வியப்போடு பார்த்து அதிசயித்தனர். இதே போன்று மறுநாளும் குறிப்பிட்ட அதே இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வந்த மயில் ஆனந்தமாக ஆடிக்கொண்டுநின்ற காட்சியை பலரும் கண்டனர்இதனால்இச்செய்தி எங்கும் பரவியது.                                                                                              இந்த அதிசய நிகழ்வு அந்த நிலத்தின் உரிமையாளரின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது திருவருளேயாகும். அடுத்த வார ஒன்றுகூடல் வழிபாடுகளின் போது அவர் தனது காணியை சைவமஹாசபைக்கு தருவதாகவும் இயன்றளவு மலிவாகத் தருவதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் தனது பெற்றோருடன் தனது சிறுவயது முதலாக வாழ்ந்த காலத்தில் அந்தக் காணியில் பலதடவை பல அற்புத நிகழ்ச்சிகள் இடம் பெற்றதெனவும் அவர் குறிப்பிட்டார். ஒருசமயம் தனது பெற்றோர்கள் வளர்த்துவந்த பசுமாடுகளில் ஒன்று நோய்கண்டு வைத்தியம் பலனளிக்காமல் இறந்துவிட்டதாகவும் உடனே அந்தப் பசுவை துணியால் மூடிவிட்டு காலையில் புதைக்கும் நோக்கத்துடன் படுக்கைக்கு சென்றதாகவும் மறுநாள்ள காலை அனைவரும் மண்வெட்டிகளுடன் வந்து பார்க்கையில் இறந்துவிட்டதாக வைத்தியர் கூறிச்சென்ற அதே பசு உயிருடன் எழுந்துநின்ற அற்புதத்தையும் தான் கண்ணாரக்கண்ட நிகழ்ச்சியை உணர்ச்சிபூர்வமாக எடுத்துக் கூறினார். அதிலிருந்து தமது பெற்றோர்கள் அந்த இடத்தில் நின்ற பெரிய விருட்சத்தில் சிவப்புத்துணி சுற்றி பூங்கொத்துவைத்து தினமும் வழிபட்டு வந்ததாகவும் சொன்னபோது இயற்கையாகவே தெய்வசக்தி நிறைந்த பொருத்தமான இடத்தை முருகனே தோந்தெடுத்து இப்போது மயிலை அனுப்பி ஆடவைத்து தான் கோவில் கொண்டு வீற்றிருக்கும் கருவறை ஸ்தானத்தையும் முருகனே அடையாளம் காண்பித்திருப்பதை உணர்ந்து அங்கிருந்த அனைவரும் பக்திப் பரவசம் அடைந்தனர். அடுத்த வாரத்திலேயே கோவிலுக்குரிய நிலத்தைக் கொள்வனவு செய்ய ஏற்பாடுகள் நிகழ்ந்தது. அவ்வேளையில் மீண்டும் ஒரு அதிசயம். அந்த நில உரிமையாளர் தான் குடியிருந்த வீட்டையும் அதனுடன் சேர்ந்த காணியையும் சேர்த்து வாங்குவது எமது சமுதாயத்திற்கு நல்லதெனவும் தனது தொழிற்கூடத்தைத் தற்காலிக ஆலயமாகப் பயன்படுத்தலாம் எனவும் ஆலோசனை கூறியதுடன் யாரும் எதிர்பாராத அளவு சகாயவிலைக்கும் தருவதற்கு முன்வந்தார். அவ்வேளை நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக பல அன்பர்கள் தாம் அந்தச் சூழலில் பிற்காலத்தில் வந்து குடியிருப்பதற்கும் முதியோர் இல்லம் போன்றவை அமைப்பதற்கும் உகந்த இடம் என அபிப்பிராயம் கூறி அந்தக் காணியைப் பங்குபோட்டு ஒவ்வொருவரும் வாங்க முன்வந்தனர். (ஆனால் பின்னர் இதனை ஆலயத்திற்கே உரிமையாக்கினர்). இவை அனைத்துமே ஒவ்வொருவர் மனத்திலும் அவ்வப்போது முருகன் புகுந்து நின்று தோற்றுவித்த எண்ணங்கள் என்பதை நினைக்கும் போது கண்ணீர் பெருகி வருவதை உணர்கிறேன். உடனடியாக தற்காலிகமான பாலாலயம் கிடைத்ததினால் உற்சவ மூர்த்திகளை வைத்து தினசரி பூஜை ஆரம்பிப்பதில் எதுவிதமான பிரச்சனையும் இருக்கவில்லை. கோவில் ஆரம்பிக்கும் முன்னரே குருக்கள் அவசியம் என உணர்ந்து பேர்த் இந்து ஆலயத்திலிருந்து ஊருக்குச் செல்லவிருந்த என்னைத் தடுத்து நிறுத்துவதற்கு சட்டப்படி ஆவன செய்தும், ஆலயப்பணி இல்லாமலேயே சிலநாட்கள் வசதியுடன் வாழ நிதி ஒழுங்குகளையும் செய்து உதவிய அன்பர்கள் பலரை என்னால் மறக்கவேமுடியாது.அன்று முதல் இன்று வரையில் சைவமகாசபையுடன் இணைந்து ஆலயத்தின் வளர்ச்சியில் பங்காற்றி வரும் ஞானானந்த சேவா சமாஜத்தினர் நிதி திரட்டும் பணியிலும் சுக்கிரவார விழா மற்றும் பௌர்ணமி தின பஜனைகள் ராதா கல்யாணம் ஆகியவற்றையும் ஆலயத்தில் நிகழ்த்தி வருவது மறக்கமுடியாததாகும். முருகன் அருளால் அவனுக்கு ஒரு பாலாலயம் மட்டுமின்றி குருக்களுக்கும் குடியிருப்பதற்கு வீடும் அமைந்ததை பெரிய அதிசயமாகவே எண்ணினர். ஆலயதோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் மூலகாரணமாக விளங்கிய பலர் தமது பெயர் வெளிவர விரும்பாதகாரணத்தினால் இதல் யாரையும் குறிப்பிட வாய்பில்லை. ஆயினும் அனைவரின் நினைப்பும் செயலும் முருகனின சக்திகளாகிய இச்சையும் கிரியையும் என்பதில் ஐயமில்லை. முருகனுக்கு பசுமாடு குஞ்சுமயில்கள் சேவல்கள் என படை பரிவாரங்கள் யாவும் வந்து குவிந்தன. மயில்கள் வளர்ந்து பல்கிப் பெருகியதனால் அவற்றிற்கு வசதியான பெரிய இல்லம் அமைக்கப் பட்டுள்ளது.

சிரமதான முயற்சிகள்

காணிவாங்கியவுடன் அங்கிருந்த பழைய இரும்புகள், வாகன உதிரிப்பாகங்கள் பாரிய மரத்துண்டுகள் வேண்டாத குப்பை கூழங்கள் ஆகிய அனைத்தையும் ஒவ்வொரு குடும்பத்தவரும் ஆண்களும் பெண்களுமாக பிரதிஞாயிறுதோறும் வந்து பல மணி நேரம் அயராது பாடுபட்டுத் துப்புரவு செய்து பரிசுத்தமடையச் செய்தனர். பழைய கொட்டகை ஒன்று சீர்திருத்தம் செய்யப்பெற்று கந்தாசிரமம் எனப்பெயரிடப்பெற்று சாப்பாட்டு இடமாகவும் அனைவரும் ஒன்றுகூடி அமர்ந்து பேசும் இடமாக ஆக்கப் பெற்றதுவும் சிரமதான முயற்சியே ஆகும். பெண்கள் பலர் குருக்களுக்கான வீட்டிற்கு பெயின்டிங் வேலைகளையும் ஜன்னல் துணிகள் தைக்கும் பணியையும் செய்து வேண்டிய தளபாடங்களையும் தந்து வசதி செய்தனர்.

பாலாலயத்தில் கும்பாபிஷேகம்

முறையான கோவில் அமைத்தவுடன் பிரதிஷ்டை செய்வதற்குரிய மூர்த்திகளை உடனடியாகத் தருவித்து பாலாலயத்தில் ஸ்தாபனம் செய்வதற்காக தீர்மானம் செய்தபோது அன்பர்கள் பலரும் தாமாகவே முன்வந்து நிதி உதவினார்கள். வெகுவிரைவில் திருவுருவங்கள் அழகிய தோற்றங்களுடன் வந்திறங்கினர். ஸ்ரீ பாலமுருகனின் அங்கலட்சணங்கள் கொள்ளையழகு எனலாம். பாலாலயக் கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நிகழ்தேறியது. கதிர்காமத்து மாணிக்க கங்கையிலிருந்தும் காசியிலுள்ள கங்காநதியிலிருந்தும் தருவிக்கப் பட்ட புண்ணிய நீராப் பூஜித்து முருகனின் காணியின் வடக்குக் கரையோரமாக ஓடிக்செல்லும் நீரோடையில் கலந்து வழிபட்டு புனித மாணிக்க கங்கையென அதற்குப் பெயரிட்டு புனிதமடையச் செய்ததுடன் அந்த நீர் வாய்க்கால் வழியோடிச் சென்று பல மைல்களுக்கு அப்பால் இந்து மஹாசமுத்திரத்தைச் சென்று சேருவதையும் தெய்வீகமாகவே எண்ணி மகிழுகின்றனர். முருகனின் பதிக்கு கந்ததோட்டம் எனப்பெயரிடப்பட்டு அப்பெயராலேயே அழைக்கப் பட்டும் வருகிறது. அன்றைய சுப முகூர்த்தத்திலேயே சிற்பசாஸ்திரமுறைப்படி அமைக்கப் படவுள்ள ஆலயத்திற்கும் அடிக்கல் நாட்டுவைபவமும் கோலாகலமாக நிறைவேறியது. முருகன் மயிலை அனுப்பி அடையாளம் காண்பித்த இடத்திலேயே ஸ்ரீ பால முருகனின் கருவறை அமைப்பதென உறுதியாகியது.

ஸ்ரீ பாலமுருகன் கனவிலம் நனவிலும் பலரிடம் திருவிளையாடல் புரிந்தவண்ணம் திருவருள்பாலிக்கிறான். யாரைப் பயன்படுத்தி எந்தக் காரியத்தை நிறைவேற்ற ÷ண்டுமோ அதனை அவரைப் பயன்படுத்தி நிறைவாகச் செயவிப்பதில் ஸ்ரீ பாலமுருகனுக்கு நிகர் எவருமேயில்லை எனலாம்.

முருகனின் ஆலய வளாகத்தில் வாழைமரங்களும் பூமரங்களும் பக்தர்களின் சிரமதான முயற்சியினால் செழிப்பாக வளர்ந்தன. ஒவ்வொரு குடும்பத்தினரும் மறைந்த தமது பெற்றோரின் ஞாபகார்த்தமாக ஒவ்வொரு மாமரங்களை விலைகொடுத்து வாங்கி நட்டுவைத்னர். அவை இப்போது வளர்ந்து பெரு மரங்களாகக் காட்சியளிக்கின்றன. கந்தகோட்டம் ஸ்ரீ பாலமுருகன் கோவில் சுற்றுப்புறச் சூழலில் மரங்களும் சோலைகளும் பசுமாட்டு மந்தைகளும் மயில்களும் அருகே நீரோடையும் அமைந்து இயற்கைவளம் மலிந்த திருக்கோவிலாக விளங்குகிறது.

அன்பர் ஒருவர் பக்தர்களின் வசதிக்காக ஆலயவளாகத்திலுள் கந்தர் ஸ்டோர் என்னும் கடையை அமைந்து பலவிதமான மளிகைச் சாமான்களையும், அவ்வப்போது முருங்கைக் காய் போன்ற உணவுப் பொருட்களையும் அபிசேக பூஜைப் பொருட்களையும் சுவாமிப்பட்டுக்கள், சுவாமி அலங்காரத்திற்குரிய பட்டு வேஷ்டி புடவைகள் ஆகியவற்றையும் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து தருவித்து மலிவு விலைக்கு வழங்குவது பக்தர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது.

 

 

Leave a review

Your email address will not be published. Required fields are marked *