இலண்டன் ஸ்ரீ முருகன் ஆலயம் பிரசித்திபெற்ற ஒரு முருகன் ஆலயமாகும். 1975ம் ஆண்டு திரு. மெய்யப்பன், திரு, திருமதி பழனியப்பன், இராமநாதன் தேனப்பன் ஆகியோரால் ஆகம முறைப்படி இலண்டனில் தமிழ் கலாச்சார முறைப்படி முருகன் ஆலயம் உருவாக்கும் முயற்சி வித்திடப்பட்டது. பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆலயத்தின் பெயர் “இலண்டன் முருகன் ஆலயம்” என்று தீர்மானிக்கப்பட்டது. ஜூலை 1978இல் ஈழத்தில் இருந்து வேல் தருவிக்கப்பட்டது. ஆலயத்தின் நிரந்தரமான ஒரு இடத்திற்காக இடம் தேடும் முயற்சிகள் நடைபெற்றன. வழமையாக வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற பூசை இம்முறை மானோர் பூங்காவின் அருகே உள்ள மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் நடைபெற்றது. காலப்போக்கில் கிழக்கு இலண்டன், மானோர் பூங்கா ஒரு சிறந்த இடம் என்று அறியப்பட்டதால் அங்கு இடம் விலைக்கு வேண்ட தை மாதம் 1983இல் தீர்மானிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் இருந்து திறமை மிக்க சிற்பிகள், கைவினைஞர்கள் வருவிக்கப்பட்டனர். 12 மாசி மாதம் 1984இல் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 1985 ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது, திருவிழாக்கோலம் பூண்ட முருகப்பெருமானின் ஊர்வலம் தெருவில் நடைபெற்றது பெரும்பான்மையான பக்தர்களைக் கவர்ந்தது.
Address
Address:
78-90 Church Road London E12 6AF
GPS:
51.548044309307, 0.05697466049934974
Telephone:
Email:
-
திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் கடற்கரைச்சேனை கிராமத்தில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு புணரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்துக்கு நிதியுதவி வழங்க முடியுமா