ஜேர்மனி நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தம் மொழி, சமயம், கலாச்சாரம் அழிந்து போகாது பேணிக்காக்கும் நோக்கத்துடன் பீலெபில்ட் நகரில் கலியுக வரதன் முருகப் பெருமானுக்கு புதிதாக ”கலியாண திருமுருகன்” ஆலயம் அமைத்துள்ளனர். 27.01.2013 அன்று மஹா கும்பாவிஷேகத்துடன் (குடமுழுக்கு) பெருஞ் சாந்தி விழா நடாத்த்தப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.
இவ் ஆலயத்தில் யாழ்ப்பாணம் நல்லூரிலே அலங்காரக் கந்தனாகவும், செல்வச் சந்நிதியில் அன்னதானக் கந்தனாகவும் கதிர்காமத்தில் ஒளிவீசும் கந்தனாக விளங்கும் கலியுகவரதன் முருகப்பெருமான் தெய்வயானை, வள்ளி சமேதரராக மூலமூர்த்தியாகவும், அம்பிகை, விநாயகர், பைரவர், மற்றும் நவக்கிரகங்கள் பரிவார மூர்த்திகளாகவும் எழுந்தருளியுள்ளார்கள்.