உரும்பிராய் அருள்மிகு சிதம்பர சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பரத்தைப்புலம்

முகவரி & தொடர்பு


Address

Amman Kovil Ln, jaffna

GPS

9.7193488707705, 80.036445594454


திறந்திருக்கும் நேரம்

தகவல் இற்றைப்படுத்தல்


தாங்கள் இவ்வாலயத்தின் நிர்வாகியா? இங்குள்ள தகவலை இற்றைப்படுத்த விரும்புகின்றீர்களா? பதிவு செய்து இற்றைப்படுத்துங்கள்..

இலங்கையின் உரும்பிராயில் பரத்தைப்புலம் என்னும் பகுதியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள ஒரே முருகப்பெருமான் கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருகாலத்திற் கீலமடைந்திருந்த இவ்வாலயம் சைவப் பெரியார்களின் முயற்சியினால் புனருத்தாரணஞ் செய்யப்பட்டு  பூசை திருவிழாக்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.  உரும்பிராயில் ஒரு கதிர்காமம் என்ற சிறப்பைத் தன்னகத்தே கொண்டது.

தைப்பூசத் திருநாளைத் தீர்த்தோற்சவ தினமாக கொண்டு 1993ம்ஆண்டு முதன்முதலாக மஹோற்சவம் நடைபெற்றது.  இம்மஹோற்சவத்தை முதன்முதலாக நடத்தி வைத்தவர் உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயிலின் பிரதம சிவாச்சாரியர்  சிவாச்சார்யமணி சிவஸ்ரீ வை. சபாரத்தினக் குருக்கள் அவர்கள் ஆவர்.  இங்கே அலங்காரத் திருவிழாக்கள் கதிர்காமத்தில் திருவிழா இடம்பெறும் அதே காலத்தில்  நடைபெறுகின்றன.

கி. வா. ஜகந்நாதன், கவிஞர் செ. அய்யாத்துரை முதலானவர்கள் இப்பகுதியில் கோயில் கொண்டுள்ள சிதம்பர சுப்பிரமணிய சுவாமி மீது துதிப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளனர்.

 

நன்றி – ஆக்கம்- ஆசிரியமணி திரு அ பஞ்சாட்சரம்

மூலம்- உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய பவளவிழா மலர் – 1992

Leave a review

Your email address will not be published. Required fields are marked *