செல்வாய் சீன மண்ணை நோக்கி..

பகிர்
Facebook
Twitter
LinkedIn
Pinterest
WhatsApp
Email
Print
Pocket

செல்வாய் சீன மண்ணை நோக்கி……………..,,,,,

வெல்வாய் அந்த கொரோனோசை!!!!!!!!!!!

வானம் வந்து கவிழ்ந்து உன்னை

கானம் கொண்டு வணங்குதே!

தானம் என்ன தாளம் என்ன

தந்தேன் எனது நெஞ்சையே!!

சொல்வதிங்கே யான் என்றாலும்

சொல்லவைப்பது நீ அன்றோ

வெல்வதிங்கே யாம் என்றாலும்

வெல்லவைப்பதும் நீ அன்றோ!!!!

கொன்று ஒழியும் நோயாம் அது

கொறோனோ வைரசாம்!!

சின்னம் சிறு உயிர் எல்லாமும்

சிந்தை கலங்கி நிற்குதே!!

வெந்தமானுடர் உடலைக்காக்க

வேல்பிடித்து வந்தேயானால்!!!

சீனம் உந்தன் சிறப்பை நாளும்

செப்பிவிட்டு செல்லுமே!!!!

தமிழர் கடவுள் என்றால் என்ன!

சீனர் கடவுள் என்றால் என்ன!

எல்லாமுமே நீ தான் கந்தா!!!!

எல்லாமுமே நீ தான்!!!

எழுவாய் !!உன் இடத்திருந்து

செல்வாய் !!சீன மண்ணை நோக்கி

வெல்வாய் !!!அந்த கொரோனசை

வாழவை அந்த மனித்த்தை!!!!!!

உங்கள் கருத்துகள் ​

Leave a Reply

villoonrikanthan

புதிய பதிவுகள்