பாமாலைகள்
அறுமுகநூறு – கவிஞர் சச்சிதானந்தம்

தமிழெனும் மந்திரம் தருவாய் போற்றி, உமியெனும் செருக்கை அறுப்பாய் போற்றி, சிமிழெனக் குவிந்த குறுநகை போற்றி, அமிழ்ந்திடும் மனமுன் அடியைப் போற்றி! 11 அரும்பாத தாமரைப் புன்னகை போற்றி, அரும்பாதம் பற்றியே போற்றுவோம் போற்றி, தரும்பாதம் பற்றினால் வரம்தருவான் போற்றி, விரும்பாத பேருக்கும் அருளுவான் போற்றி! 12 ஐந்தமு துணவின் சுவையே போற்றி, நைந்தம னங்களுக் கருள்வாய் போற்றி! வைந்தவ ரெல்லாம் வருவார் போற்றி, பைந்தமிழ் மைந்தன் பெருமை போற்றி! 13 இசைக்கு மயங்கும் இறைவா போற்றி, இமைக்க மறந்தேன் உன்னைப் போற்றி, இணைந்து கொண்டேன் தலைவன் போற்றி, இருண்ட இதயம் களைவோன் போற்றி! 14 வாரம் கடந்து, வருடம் கடந்து, வாழ்வைக் கடந்து, வேட்கை கடந்து, காமம் கடந்து, கவலை கடந்து, கந்தன் அருளின் கருணை அடைவோம்! 15 சிதிலம் அடைந்த சிந்தனை கடந்து, உதிரம் அடைந்த நஞ்சினைக் களைந்து, எதிலும் நிலையா மனதை மறந்து, கதியென் றறுமுகன் மதிமுகம் தொழுவோம்! 16 தா ளிரெண்டும் தீ யாக, தோ ளிரெண்டும் பூ வாக, மேனிஎங்கும் நீ ரோட, வா என்றாய் தா விவந்தேன்!17 பிடியோடு உறவாடும் உன்னண் ணனை, பிடிசாம்பல் கொண்டாடும் உன்னப் பனை, விடிவெள்ளி போலொளிரும் உன்னம் மையை, படியேறி வருகையில் பாடுகின் றேன்!18 கதிரேறி உச்சிக்கு வந்த பின்னும், படியேறு மிச்சைக்கு ஏது விண்ணம்? நிலவேறு மிரவென்னு மினிய வெண்ணம், மனமேறிக் குளிர்வதால் படி ஏறுவோம்!19 அரகரா! அரகரா! அதரங்கள் சொல்லும், சரவணா! சரவணா! சிகரங்கள் … 20 அச்சமுற்ற நெஞ்சம் அரகரா என்றிடட்டும், அப்பனுற்ற பணிவைப் பணிவோடு கொண்டிடட்டும், அப்பழுக்கு அற்று அன்புமனம் அமைந்திடட்டும், அக்கினிக்கு ளுற்ற அறுமுகனைக் கொஞ்சிடட்டும்!21 அச்சம் கொடுத்தான், அன்பைக் கொடுத்தான், அத்தன் படைத்த அறிவைக் கொடுத்தான், அல்லல் கொடுத்து, உள்ளத் தெளிவை, அள்ளிக் கொடுத்து அகிலம் […]
சண்முக கவசம் – பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

அண்டமாய் அவனியாகிஅறியொணாப் பொருளது ஆகித் தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி எண்திசை போற்ற நின்ற என் அருள் ஈசன் ஆன திண்திறல் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க ஆதியாம் கயிலைச் செல்வன் அணிநெற்றி தன்னைக் காக்க தாது அவிழ் கடப்பந் தாரான் தானிறு நுதலைக் காக்க சோதியாம் தணிகை ஈசன் துரிசு இலா விழியைக் காக்க நாதனாம் கார்த்திகேயன் நாசியை நயந்து காக்க இரு செவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க வாயை முருகவேள் காக்க நாப்பல் முழுதும்நல் குமரன் காக்க துரிசு அறு கதுப்பை யானைத்துண்டனார் துணைவன் காக்க திருவுடன் பிடரி தன்னைச்சிவ சுப்பிரமணியன் காக்க ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க ஆசுஇலா மார்பை ஈர ஆயுதன் காக்க எந்தன் ஏசுஇலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக் கோன் காக்க உறுதியாய் முன்கை தன்னை உமையிள மதலை காக்க தறுகண் ஏறிடவே என்கைத்தலத்தை மாமுருகன் காக்க புறம் கையை அயிலோன் காக்க பொறிக்கர விரல்கள் பத்தும் பிறங்கு மால்மருகன் காக்க பின் முதுகைச் சேய் காக்க ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை ஊர்தியோன் காக்க வம்புத் தோள் நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க, குய்ய நாணினை அங்கி கௌரி நந்தனன் காக்க, பீஜ ஆணியைக் கந்தன் காக்க அறுமுகன் குதத்தைக் காக்க எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க அம்சகனம் ஓர் இரண்டும் அரன்மகன் காக்க காக்க விஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க செஞ்சரண்நேர ஆசான் திமிருமுன் தொடையைக் காக்க ஏரகத் தேவன் என்தாள் இரு முழங்காலும் காக்க சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த் தே காக்க நேருடைப் பரடு இரண்டும் நிகழ் பரங்கிரியன் காக்க சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க ஐயுறு மலையன் பாதத்து அமர் பத்து விரலும் காக்க பையுறு பழநி […]
சுப்ரமண்ய புஜங்கம்

ஸ்ரீ ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் அபிநல குப்தரின் அபிசார மந்தீரீக ஏவலால் கடும் வயிற்றுவலியால் அவதியுற்று, வட நாட்டிலிருந்து புறப்பட்டு பல திருத்தலங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபட்டும் அந்நோய் தீர்ந்தபாடில்லை. திருச்சீரலைவாய் என்று வழங்கப்படும் திருச்செந்தூர் வந்து திருச்செந்திலாண்டவனை மனமுருக வேண்டி பன்னீர் இலை விபூதியை சாப்பிட்டதும் அதுவரை அவரை வாட்டி வதைத்த வயிற்றுவலி அறவே நீங்கி விட்டது கண்டு மகிழ்ச்சியால் செந்திலாண்டவனை அவர் துதித்த 33 ஸ்லோகமே ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் இதை மனமுருக பாராயணம் செய்வோர் தமது தீராத பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பர் திருச்செந்திலாண்டவன் அருளும் ஸ்ரீ ஆதிசங்கராச்சாரிய சுவாமிகளின் ஆசியும் ஒருங்கே பெறுவர். 1. ஸதா பாலரூபாபி விக்நாத்ரி ஹந்த்ரீ மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்ய மாந்யா விதீந்த்ராதி ம்ருக்யா கணேஸாபிதா மே விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாண மூர்த்தி : 2. ந ஜாநாமி ஸப்தம் ந ஜாநாமி சார்த்தம் ந ஜாநாமி பத்யம் ந ஜாநாமி கத்யம் த சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே முகாந் நிஸ்ஸரத்தே கிரஸ் சாபி சித்ரம் 3. மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம் மநோஹாரி தேஹம் மஹச்சித்த கேஹம் மஹீவே தேவம் மஹாவேத பாலம் மஹா தேவ பாலம் பஜே லோக பாலம் 4. யதா ஸந்திதாநம் கதா மாநவா மே பவாம் போதி பாரம் கதாஸ் தே ததைவ இதி வ்யஞ்ஜயந் ஸிந்துதீரே ய ஆஸ்தே தமீடே பவித்ரம் பராஸக்தி புத்ரம் 5. யதாப்தேஸ் தரங்கா லயம் யாந்தி துங்கா: ததைவாபத: ஸந்நிதௌ ஸேவதாம் மே இதீவோர்மி பங்க்தீர் ந்ருணாம் தர்ஸயந்தம் ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம் 6. கிரௌ மந்நிவாஸே நரா யே திரூடா: ததா பர்வதே ராஜதே தே திரூடா: இதீவ ப்ருவத் கந்த ஸைலா தே திரூடா ஸ தேவேர முதே மே ஸதா ஷண்முகோ ஸ்து 7. மஹாம்போதி தீரே மஹாபாபசோரே முநீந்த்ராநுகூலே ஸூகந்தாகயஸைலே […]
முத்தைத் தரு பத்தித் திருநகை

முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ….எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பதுமூ வர்க்கத்து அமரரும் ….அடிபேண பத்துத் தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ….இரவாகப் பத்தற்கு இரதத்தைக் கடவிய பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ….ஒருநாளே தித்தித் தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கு ஒக்கு நடிக்கக் கழுகொடு …. கழுதாடத் திக்குப் பரி அட்டப் பயிரவர் தொக்குத் தொகு தொக்குத் தொகு தொகு சித்ரப் பவுரிக்கு த்ரிகடக ….எனவோதக் கொத்தப் பறை கொட்டக் களமிசை குக்குக் குகு குக்குக் குகுகுகு குத்திப் புதை புக்குப் பிடியென ….முதுகூகை கொட்புற் றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி இட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல ….பெருமாளே !
திருப்புகழ் தோன்றிய வரலாறு

அருணகிரிநாதர் உலகை வெறுத்து உயிரை மாய்த்துக் கொள்வதற்காகத் திருவண்ணாமலைக் கோபுர உச்சியிலிருந்து குதித்தபோது அவரைத் தன்செங்கையில் ஏந்தித் தன் கருணைத் திருப்பாதங்களைக் காட்டி ஆட்கொண்டான் முருகன். நினைக்க முத்தி அருளும் திருவண்ணாமலையில் அருணகிரிநாத சுவாமிகள்முருகப்பெருமானிடம் “சும்மா இரு சொல்லற” என்ற மௌன மந்திரோபதேசம் பெற்று நிர்விகற்ப சமாதியில் வீற்றிருக்க, முருகன் மயில் மிசைத்தோன்றி, “உலகம் உய்யத் திருப்புகழ் பாடுதி” என்றருள் புரிய அருணகிரியார் மறைகளாலும் சாற்றுதற்கரிய தேவரீரது புகழை “ஏடெழுதா முழு ஏழையாகிய” சிறியேன் எங்ஙனம் பாடுவேன் என்றும், “நாக்கைநீட்டு” என்று வேலின் நுனியால் “ஓம்” எனும் மந்திரத்தை எழுதினார். சேந்தமிழ்ப் பரமாசாரியனாம் செவ்சேட்பெருமான தனது “ஞானமூறு செங்கனிவாய்” மலர்ந்து செந்தமிழால் “முத்தைத்தரு” என்று அடியெடுத்துக் கொடுக்கவே கடல் மடைதிறந்த வெள்ளம் போலத் திருப்புகழைப் பாடினார். முருகவேள் “வயலூருக்குவா” என்றருள் புரிய அருணகிரியார் வயலூர்சென்று பொய்யாக்கணபதி சந்நிதியில் நின்று “கைத்தலம் நிறைகனி” என்ற திருப்புகழைப்பாடினார். முருகன் கனவிலும் நனவிலும் அடிக்கடி தரிசனந்தந்தருள் புரிந்ததும் தெய்வீகம் பொருந்திய திருத்தலமானபடியாலும் வயலூரையும் திருப்புகழில் இடையிடையே பாடினார்.முருகன் திருவடிபட்டு அனுக்கிரகம் பெற்ற ஒப்பற்ற பாமாலைதான் தித்திக்கும் திருப்புகழ். கந்தவேளின் திருவடிகள் மூன்று இடங்களிற்பட்டன.மயில்மீது, தேவர்தலைமீது, மூன்றாவது திருப்புகழ் ஏட்டில் எத்தனையோ சிறப்புக்கள் மிக்கதிருப்புகழை இடையறாது அன்புடன் ஓதினால் முருகன் நம் வயப்படுவான். திருப்புகழை ஓத ஆசைப்பட்டாலே போதும் எத்துணைப் பாவங்கள் புரிந்தாரேனும் பாவநாசகனாகிய குமரக்கடவுள் தரிசனையுண்டாகுமேல் பாவங்கள் முழுவதும் நீங்கித் தூயவராவார். திருப்புகழின் சந்தத்திற்கு இணையான ஒன்று எந்த மொழிஇலக்கியத்திலுமில்லை. விந்தையான சந்தம் கொண்டு சிந்தைகவர்வது. சங்கத்தமிழின் தலைமைப்புலவனாம் குமரவேளைச் சந்தத்தமிழிற் பாடித் திருப்புகழ் ஆக்கியவர் அருணகிரிநாதர். நம் பிறவிப் பந்தம்களைய வல்ல சங்கத்தமிழ்நூல் “திருப்புகழ்” பேரின்பப் பெருவெள்ளம் அது. படிப்போரைப் பக்தி வெள்ளத்தில் திக்குமுக்காடச் செய்யும் தெய்வீகத்தேனே அருணகிரியின் இலக்கியம். முருகன் திருவருளை வேண்டிச் “சந்தக்கடல் என்று கூறுமளவில் பல ஆயிரம் பாமாலைகளை முருகன் திருவடிகளிற் சூட்டி மகிழ்ந்தார் அருணகிரிநாதர். இன்று நமக்குக் கிடைப்பவை 1328 திருப்புகழ்ப் […]
அருணகிரிநாதர்

அருணகிரிநாதர், தெற்கிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் சென்னைக்கு அருகே உள்ள திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப்போல் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். திருவண்ணாமலை என்று சிலரும், காவிரிப்பூம்பட்டினம் என்று சிலரும் அருணகிரிநாதர் பிறந்த இடம் என்று சொல்கின்றனர். தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் சொல்கின்றனர். திருவண்ணாமலைக்கு எப்போது வந்தார் என்பது சரிவரத் தெரியவில்லை. சிலர் இவருடைய தாயார் ஒரு பரத்தை என்றும் சொல்கின்றனர். இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்ததாய்ச் சொல்லுவதுண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். இவர் தீய செயல்களைச் செய்கின்றார், சிறு வயதில் இருந்தே பெண்ணாசை கொண்டவராய் இருக்கிறார் என்பது தெரிந்தும் அந்த அம்மையார் நாளாவட்டத்தில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணமும் ஆகியது. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ, பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும், வெளியில் பரத்தையரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாய்ச் […]
கந்தசட்டி கவசம் – திருச்செந்தூர்

காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர சமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக! வாசவன் முருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! சரவண பவனார் சடுதியில் வருக ரவண பவச ர ர ர ர ர ர ர ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி விபச சரவண வீரா நமோநம நிபவ சரவண நிறநிற நிறென வசுர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும் உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும் கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக! ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்பரி நூலும் முத்தணி மார்பும் […]
கந்தகுரு கவசம்

கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்தென்னை ரக்ஷித்திடுவீரே. ஸ்கந்தா சரணம்; ஸ்கந்தா சரணம் சரவணபவ குஹா சரணம் சரணம் குருகுஹா சரணம்; குருபரா சரணம் சரணமடைந்திட்டேன் கந்தா சரணம் தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் அவதூத ஸத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர் அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே அறள் பொருளின்பம் வீடுமே தந்தருள்வாய் தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுரு நாதா சண்முகா சரணம் சரணம் ஸ்கந்தகுரோ காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி போற்றி போற்றி முருகா போற்றி அறுமுகா போற்றி; அருட்பதம் அருள்வாய் தகப்பன் சாமியே என் இதயத்துள் தங்கிடுவாய் ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய் சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம் திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே ஆறுமுக ஸ்வாமி யுன்னை அருட்ஜோதியாய்க் காண அகத்துள்ளே குமரா நீ அன்புமயமாய் வருவாய் அமரத் தன்மையினை அனுக்ரஹித் திடுவாயே வேலுடைக் குமரா; நீ வித்தையும் தந்தருள்வாய் வேல்கொண்டு வந்திடுவாய்; காலனை விரட்டிடவே தேவரைக் காத்த திருச்செந்திலாண்டவனே திருமுருகன் பூண்டியிலே திவ்யஜோதியான கந்தா பரஞ்ஜோதியுங் காட்டி பரிபூர்ண மாக்கிடுவாய் திருமலை முருகா நீ திடஞான மருள்புரிவாய் செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் அடிமுடியறிய வொணா அண்ணா மலையோனே அருணாசலக் குமரா அருணகிரிக் கருளியவா திருப்பரங்கிரி குஹனே தீர்த்திடுவாய் வினைமுழுதும் திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய் எட்டுக்குடி குமரா ஏவல்பில்லி சூனியத்தை பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய் எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே எங்கும் நிறைந்த கந்தா; எண்கண் முருகா நீ என்னுள்ளறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய் […]
கந்தர் அலங்காரம்

காப்பு அடலருணைத் திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு வட வருகிற் சென்று கண்டுகொண்டேன்வருவார் தலையில் தடபடெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக் கடதட கும்பக களிற்றுக் கிளைய களிற்றினையே. நூல் பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர பஞ்ச மென்னுஞ் சேற்றைக் கழிய வழிவிட்ட வா. செஞ்சடாடவிமேல் ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே. 1 அழித்துப் பிறக் கவொட்டாவயில் வேலன் கவியையன்பால் எழுத்துப் பிழையறக் கற்கின்றி வீரெரி மூண்டதென்ன விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற் கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே. 2 தேரணி யிட்டுபட புரமெரித் தான்மகன் செங்கையில்வேற் கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர் நேரணி யிட்டு வளைந்த கடக நௌiந்ததுசூர்ப் பேரணி கெட்டது தேவேந்தர லோகம் பிழைத்ததுவே. 3 ஓரவொட்டாரொன்றை யுன்னவொட்டார்மலரிட்டுனதான் சேரவொட்டாரைவர் செய்வதென்யான் சென்று தேவருய்யச் சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிக்கக் கூரகட்டாரியிட் டோ ரிமைப் போதினிற் கொன்றவனே. 4 திருந்தப் புவனங்களீன்ற பொற்பாவை திருமுலைப்பால் அருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறி யறுவர்கொங்கை விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழுங் குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென் றோதுங் குவலயமே. 5 பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்புங் குமரனை மெய்யின்பி னான்மெல்ல மெல்லவுள்ள அரும்புந் தனிப்பர மாநந்தந் திfத்தித் தறிந்தவன்றே கரும்புந் துவர்த்துச்செந் தேனும் புளித்தறக் கைத்ததுவே. 6 சளத்திற் பிணிபட்டசட்டு க்ரியைக்குட் டவிக்கு மென்றன் உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா யவுண ருரத்துதிரக் குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக் களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே. 7 ஔiயில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல் அளியில் விளைந்ததொரா நந்தத் தேனை யநாதியிலே வௌiயில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத் தௌiய விளம்பிய வா.. முகமாறுடைத்தேசிகனே. 8 தேனென்று பாகனெfறுவமிக் கொணாமொழித் தெய்வ வள்ளி கோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று […]
கந்தர் கலி வெண்பா

பூமேவு செங்கமலப் புத்தேளுந் தேறரிய பாமேவு தெய்வப் பழமறையும் – தேமேவு 1 நாதமுநா தாந்த முடிவு நவைதீர்ந்த போதமுங் காணாத போதமாய் – ஆதிநடு 2 அந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப் பந்தந் தணந்த பரஞ்சுடராய் – வந்த 3 குறியுங் குணமுமொரு கோலமுமற் றெங்கும் செறியம் பரம சிவமாய் – அறிவுக் 4 கனாதியா யைந்தொழிற்கு மப்புறமாய் அன்றே மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் – தனாதருளின் 5 பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும் தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் – எஞ்சாத 6 பூரணமாய் நிந்தமாய்ப் போக்குவரவும் புணர்வும் காரணமும் இல்லாக் கதியாகித் – தாரணியில் 7 இந்திரசாலம் புரிவோன் யாவரையும் தான்மயக்கும் தந்திரத்தில் சாராது சார்வதுபோல – முந்தும் 8 கருவின்றி நின்ற கருவாய் அருளே உருவின்றி நின்ற உருவாய்த் – திரிகரணம் 9 ஆகவரும் இச்சை அறிவு இயற்றலால் இலயம் போகஅதி காரப் பொருளாகி – ஏகத்து. 10 உருவும் அருவும் உருஅருவும் ஆகிப் பருவ வடிவம் பலவாய் – இருண்மலத்துள் 11 மோகமுறும் பல்லுயிர்க்கும் முத்தி அளித் தற்குமல பாகமுறவே கடைக்கண் பாலித்துத் – தேகமுறத் 12 தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான் பெந்த முறவே பிணிப்பித்து – மந்த்ரமுதல் 13 ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற் கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து – மாறிவரும் 14 ஈரிரண்டு தோற்றத்து ஏழுபிறப்புள் யோனி எண்பான் ஆரவந்த நான்குநூறாயிரத்துள் – தீர்வரிய 15 கன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போற் சென்மித்து உழலத் திரோதித்து – வெந்நிரய 16 சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால் நற்காரணம் சிறிது நண்ணுதலும் – தர்க்கமிடும் 17 தொன்னூல் பரசமயம் தோறும் அதுவதுமே நன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து – முன்னூல் 18 விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைச் சரியைகிரி யாபோகம் சார்வித்து – அருள்பெருகு 19 சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து ஆலோகம் தன்னை […]
கந்தர் அனுபூதி

காப்பு நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே பஞ்சக் கரவானை பதம் பணிவாம். நூல் ஆடும் பணிவே லணிசே வலெனப் பாடும் பணியே பணியா யருள்வாய் தேடுங் கயமா முகனைச் செருவிற் சாடுந் தனியா னைசகோ தரனே. 1 உல்லாச நிராகுல யோக விதச் சல்லாப விநோதனு நீயலையோ எல்லாமற என்னை யிழந்த நலஞ் சொல்லாய் முருகா கரபூ பதியே. 2 வானோ புனல்பார் கனல்மா ருதமோ ஞானோ தயமோ நவில்நான் மறையோ யானோ மனமோ எனையாண் டவிடந் தானோ பொருளா வதுசண்முகனே. 3 வளைபட் டகைம் மாதொடு மக்களெனுந் தளைபட் டழியத் தகுமோ தகுமோ கிளைபட் டெழுகு ருரமுங் கிரியுந் தொளைபட் டுருவத் தொடுவே லவனே. 4 மகமாயை களைந்திட வல்ல பிரான் முகமாறு மொழிந்து மொழிந் திலனே அகமாடை மடந்தை யரென் றயருஞ் சகமாயையுள் நின்று தயங் குவதே. 5 திணியா னமனோ சிலைமீ துனதாள் அணியா ரரவிந்த மரும்பு மதோ பணியா வென வள்ளி பதம் பணியுந் தணியா வதிமோக தயா பரனே. 6 கெடுவாய் மனனே கதிகேள் கரவா திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய் சுடுவாய் நெடுவே தனைதூள் படவே விடுவாய் விடுவாய் வினையா வையுமே. 7 https://www.kanthakottam.com/mp3/kanthar_anupoothi.mp3 அமரும் பதிகே ளகமா மெனுமிப் பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பொரு தானவ நாசகனே. 8 மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப் பட்டூசல் படும் பரிசென் றொழிவேன் தட்டூ டறவேல் சயிலத் தெறியும் திட்டூர நிராகுல நிர்ப் பயனே. 9 கார்மா மிசைகா லன்வரிற் கலபத் தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய் தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ் சூர்மா மடியத் தொடுவே லவனே. 10 கூகா வெனவென் கிளைகூ டியழப் போகா வகைமெய்ப் பொருள்பே சியவா நாகாசல வேலவ நாலு கவித் […]
கந்தசட்டி கவசம் – திருப்பரங்குன்றம்
திருப்பருங்குன்றுரை தீரனே குகனே மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா குறுக்குத்துறையுறை குமரனே அரனே இருக்கும் குருபரா ஏரகப்பொருளே வையாபுரியில் மகிழ்ந்து வாழ்பவனே ஒய்யார மயில் மீது உகந்தாய் நமோ நமோ ஐயா குமரா அருளே நமோ நமோ மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ பழநியங்கிரிவாழ் பகவா நமோ நமோ மழுவுடை முதல்வன் மதலாய் நமோ நமோ விராலிமலையுறை விமலா நமோ நமோ மராமரம் துளைத்தோன் மருகா நமோ நமோ சூரசங் காரா துரையே நமோ நமோ வீரவேலேந்தும் வேளே நமோ நமோ பன்னிரு கரமுடைப் பரமா நமோ நமோ கண்களீராறுடை கந்தா நமோ நமோ கோழிக்கொடியுடைக் கோவே நமோ நமோ ஆழிசூழ் செந்தில் அமர்ந்தாய் நமோ நமோ சசச சசச ஓம் ரீம் ரரர ரரர ரீம்ரீம் வவவ வவவ ஆம் ஹோம் ணணண ணணண வாம்ஹோம் பபப பபப சாம் சூம் வவவ வவவ கெளம் ஓம் லல லிலி லுலு நாட்டிய அட்சரம் கக கக கக கந்தனே வருக இக இக இக ஈசனே வருக தக தக தக சற்குரு வருக பக பக பக பரந்தாமா வருக வருக வருகவென் வள்ளலே வருக வருக வருக நிஷ்களங்கனே வருக தாயென நின்னிருதாள் பணிந்தேன் எனைச் சேயெனக் காத்தருள் திவ்யமா முகனே அல்லும் பகலும் அனுதினமும் என்னை எல்லிலும் இருட்டிலும் எரிபகல் படுக்கை வல்லவிடங்கள் வாராமல் தடுத்து நல்ல மனத்துடன் ஞானகுரு உனை வணங்கித் துதிக்க மகிழ்ந்துநீ வரங்கள் இணங்கியே அருள்வாய் இறைவா எப்போதும் கந்தா கடம்பா கார்த்தி கேயா நந்தன் மருகா நாரணி சேயே என்ணிலாக் கிரியில் இருந்து வளர்ந்தனை தண்ணளி அளிக்கும் சாமிநாதா சிவகிரி கயிலை திருப்பதி வேளூர் தவக்கதிர்காமம் சார்திரு வேரகம் கண்ணுள் மணிபோல் கருதிடும் வயலூர் விண்ணவர் ஏத்தும் விராலி மலைமுதல் தன்னிக ரில்லாத் தலங்களைக் கொண்டு சன்னதி யாய்வளர் சரவண […]
கந்தசட்டி கவசம் – திருவாவினன்குடி

திருவாவினன்குடி சிறக்கும் முருகா குருபரா குமரா குழந்தைவே லாயுதா சரவணை சண்முகா சதாசிவன் பாலா இரவலர் தயாபரா ஏழைபங் காளா பரமேஸ் வரிக்குப் பாலா தயாபரா வரமெனக் (கு) அருள்வாய் வாமனன் மருகா இரண்டா யிரம் வெள்ளம் யோகம் படைத்தவா திரண்டா ருகமனம் தீர்க்கம் படைத்தவா இலட்சத்திருநான்கு நற்றம்பி மாருடன் பட்சத்துடனே பராசக்தி வேலதாய் வீர வாகு மிகுதள கர்த்தனாய் சூர சங்காரா துஷ்ட நிஷ்டூரா கயிலாய மேவும் கனக சிம்மாசனா மயிலேறும் சேவகா வள்ளி மனோகரா அகத்திய மாமுனிக் (கு) அருந்தமிழ் உரைத்தவா சுகத்திரு முறுகாற் றுப்படை சொல்லிய நக்கீரன் நற்றமிழ் நலமென வினவிக் கைக்கீழ் வைக்கும் கனமிசைக் குதவா திருவருணகிரி திருப்புகழ் பாட இரும்புகழ் நாவில் எழுதிப் புகழ்ந்தவா ஆயிரத்தெட்டாம் அருள்சிவ தலத்தில் பாயிரம் தோத்திரம் பாடப் புகழ்ந்தவா எண்ணா யிரம் சமண் எதிர்கழு வேற்றி விண்ணோர் குமாரன் வியாதியைத் தீர்த்தவா குருவாம் பிரமனைக் கொடும்சிறை வைத்தே உருபொருள் வேதம் உரைத்தாய் சிவனுடன் கருதிமெய் யோகம்சொல்லியது ஒருமுகம் அருள்பெறு மயில்மீ (து) அமர்ந்த (து) ஒருமுகம் வள்ளிதெய் வானையை மருவிய (து) ஒருமுகம் தெள்ளுநான்முகன் போல் சிருட்டிப்ப (து) ஒருமுகம் சூரனை வேலால் துணித்த (து) ஒருமுகம் ஆரணம் ஓதும் அருமறை யடியார் தானவர் வேண்டுவ தருவ (து) ஒருமுகம் ஞானமுதல்வருக்கு நற்பிள்ளை பழநி திருப்பரங் கிரிவாழ் தேவா நமோ நம பொருட் செந்தில் அம்பதி புரப்பாய் நமோ நம ஏரகம் தனில்வாழ் இறைவா நமோநம கூரகம் ஆவினன்குடியாய் நமோநம சர்வ சங்கரிக்குத் தனயா நமோநம உறுசோலைமலைமேல் உகந்தாய் நமோநம எல்லாக்கிரிக்கும் இறைவா நமோ நம சல்லாப மாக சண்முகத்துடனே எல்லாத் தலமும் இனிதெழுந்தருளி உல்லாசத்துறும் ஓங்கார வடிவே மூல வட்டத்தில் முளைத்தெழும் ஜோதியை சாலமுக்கோணத் தந்தமுச் சக்தியை வேலாயுதமுடன் விளங்கும் குகனைச் சீலமார் வயலூர்ச் சேந்தனைத் தேவனை கைலாச மேருவாகாசத்தில் கண்டு பைலாம் பூமியும் பங்கய பார்வதி மேலும் பகலும் […]
பஞ்சாமிர்த வண்ணம்
சிறீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் (Panchamirthavannam lyrics) . முருகப்பெருமானுக்கு மிகவும் விருப்பமானது. முருகப்பெருமானே, இப்பாடல் பாராயணம் செய்யும் இடங்களில் வருவேன், இருப்பேன் என்று கூறியதாக வரலாறு. இப்பாடலை நாளும் பாராயணம் புரிந்தால், முருகனருள் எளிதில் கிடைப்பது உறுதி. பாகம் 1 – பால் சுப்பிரமணிய பெருமான் சூரபத்மனுடன் போரிடும் மகிமை. முருகனின் போர் வெற்றி குறித்து ஜெயகோஷம். பிணிபோக்க விண்ணப்பம். 1 – 1 இலங்கு நன்கலை விரிஞ்சனோடு அனந்தனும் சத மகன்சதா வியன்கொள் தம்பியர்களும் பொனாடு உறைந்த புங்கவர்களும் கெடாது என்றும் கொன்றை அணிந்தோனார் தந் தண் திண் திரளும் சேயாம் என்றன் சொந்தமினும் தீதேது என்று அங்கங்கு அணி கண்டு ஓயாது ஏந்து வன்படைவேல் வலி சேர்ந்த திண்புயமே ஏய்ந்த கண்டகர்கால் தொடை மூஞ்சி கந்தரமோடு எலும்புறும் தலைகளும் துணிந்திட அடர்ந்த சண்டைகள் தொடர்ந்துபேய் எனும் குணுங்குகள் நிணங்கள் உண்டு அரன் மகன் புறஞ்சயம் எனும்சொலே . . . . . . களமிசையெழுமாறே ……… பதவுரை ……… இலங்கு நன்கலை விரிஞ்சனொடு – (அழகாக) விளங்கும் நான்மறை ஓதும் பிரம்மனும் அனந்தனும் சதமகன் – நாராயணனும் தேவர் கோனான இந்திரனும் சதா வியன்கொள் தம்பியரும் – நிலைபெற்ற பெருமை கொண்ட தம்பியரும் பொனாடுறைந்த புங்கவர்களும் கெடாது – பொன்னுலகம் என்று கூறப்படும் தேவலோகத்தில் வாழும் தேவர்களும் அழியாதவாறு என்றும் கொன்றை அணிந்தோனார் தன் – எப்பொழுதும் கொன்றை மாலை அணிந்த பரமசிவனாரது தண் திண் திரளும் சேயாம் – திரண்ட சேனைக்கு அதிபனாம் கந்தன் (ஆகிய) என்றன் சொந்தம் இனும் தீதேது – எனக்கு உற்றவனர் (என்ற பிறகு) இனிமேலும் தீங்கு உண்டோ என்று அங்கு அங்கு அணிகண்டு ஓயாது – (சூரனொடு) போரிடும்படி எல்லா திக்குகளிலும் அணிவகுத்து உள்ள படைகளைப் பார்த்து நீங்காது ஏந்து வன்படை வேல் வலி சேர்ந்த திண்புயமே […]