உள்ளத்தே உன்னை வைத்து
உலகமே நீ தான் ஆக
செல்வனே உந்தன் சிரிப்பு
சிந்தை கவர்ந்ததையா!!!
கந்தனே உன்னை யானும்
கடுகியே வணங்கையிலே,
கள்ளமாய் சிரித்ததேனோ!!!
தெள்ளமாய் தெரிந்ததையா??
மாயமோ மந்திரமோ இது
என் மனதை ஆளும் விந்தையன்றோ
காயமே போகும்போதும் என்
கற்பனைஉள் வந்ததேனோ!
முருகா !!முருகா!!
sri bava
