கந்தரனுபூதியின் மகிமை

கந்தர் சஷ்டி விரதம் ஸ்பெஷல் !
 
வறுமையில் வாடிய முருகனடியார் ஒருவர் தினமும், அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதியை பாராயணம் செய்து வந்தார்.இருந்தாலும் வறுமை நீங்கவில்லையே… என வருந்தினார். செல்வ வளம் பெற, லட்சுமி குறித்த வேறு நுாலை பாராயணம் செய்ய வேண்டுமோ? என்ற சந்தேகம் எழுந்தது.அதை தீர்க்க விரும்பிய அடியவர், காஞ்சிபுரம் புறப்பட்டார். பரமாச்சாரியாரை தரிசித்தார்.
 
”சுவாமி…. எனக்கு இப்போது, முதல் தேவை பணம் தான். கடன் சுமையால் கஷ்டப்படுகிறேன். வட்டி கட்டமுடியவில்லை. கந்தர் அனுபூதி பாராயணம், வறுமை போக்கும் என எனக்கு தோன்றவில்லை.லட்சுமி கடாட்சம் பெற ஏதேனும் ஸ்லோகம் இருந்தால் பரிந்துரை செய்யுங்கள்” என்றார்.பரமாச்சாரியார் அவரிடம், ” முன்ஜென்ம வினைப்பயன் நீங்கும் வரை நம்பிக்கைஉடன் பாராயணம் செய்ய வேண்டும். அதன் பின் பலன் கிடைக்கும். இன்னின்ன பலன் பெற இன்னின்ன பாராயணம் என்று அதில் இருக்கிறது. கந்தர் அனுபூதி நிச்சயம் செல்வ வளம் தரும்.”
 
கந்தர் அனுபூதியில் இதற்கு சான்று இருக்கிறதா சுவாமி?
சுவாமிகள் புன்முறுவலுடன், ”வெளியில் ஏன் தேட வேண்டும். பாட்டுக்குள்ளே சான்று இருக்கிறதே? கந்தர் அனுபூதியின் கடைசி அடியைச் சொல்லேன் பார்க்கலாம்”
 
அடியவர் கடைசி அடியை ராகத்துடன் ‘குருவாய் வருவாய் அருள்வாய் குகனே’ என்றார்.
 
‘அதற்கு என்ன பொருள்?’
 
‘குருவாய் வந்து அருள்புரிவாய் குகனே என்று பொருள்’
 
பரமாச்சாரியார் சிரித்தபடி விளக்க ஆரம்பித்தார். ”வருவாய் அருள்வாய் என்றால் ‘வா, வந்து அருள்புரிய வேண்டும்’ என்பது ஒரு பொருள். இது தவிர, ‘வருவாய் தா’ என்றும் ஒரு பொருள் உண்டு இல்லையா? கந்தர் அனுபூதி பாராயணம் செய்தால் ‘வருவாய் பெருகும்’ என்பதில் இன்னுமா சந்தேகம்? வேறு ஸ்லோகம் தேவையில்லை. கந்தர் அனுபூதியை தொடர்ந்து பாராயணம் செய்ய செல்வ வளம் பெருகும்.
 
நன்றியுடன் விடைபெற்ற அடியவருக்கு கந்தரனுபூதியின் மகிமை புரிந்தது.
 
 
 
 
 
 
 
Picture of Sri Bava

Sri Bava

Leave a Replay