ஆண்டவன் பிச்சி

ஆண்டவன் பிச்சியின் தோழி , தான் நடத்தும் பத்திரிக்கைக்குப் பக்திப் பாடல் வேண்டும் என்று கேட்டார் ஆண்டவன் பிச்சியிடம். ஆண்டவன் பிச்சி, தம் மாமியார்,பாடல்களைப் போட்டு வைத்த பெட்டியை எடுத்துத் திறந்தார். என்ன வியப்பு!மாமியார் சேர்த்து வைத்திருந்த ரூபாய் நோட்டுகள் எல்லாம் செல்லரிக்கப் பட்டு இருந்தன.ஆண்டவன் பிச்சி இயற்றிய முருகனைப் பற்றிய பக்திப் பாடல்கள் மட்டும் சிதலம் அடையாமல் அப்படியே இருந்தன.
Aandavan-Pichchi
24 ஆண்டுகள் கடந்தன..பெட்டிக்குள்இருந்த ரூபாய் நோட்டுகள் செல்லரிக்கப்பட்டன..ஆனால் முருகனைப் பற்றியபக்திப் பாடல்கள் செல்லரிக்கப் படாமல்அப்படியே நன்றாக இருந்தன…
ஆண்டவன் பிச்சி (ஆண்டவன் பிச்சைஎன்பாரும் உளர்) என்று மகாபெரியவர்பெயர்சூட்ட அப்பெயராலேயே அறியப்பட்டவர் மரகதம் என்ற உத்தமி.உள்ளம் உருகுதய்யா என்ற புகழ்மிக்க
பாடலைப் பாடியருளியவர் இவர்.( உள்ளம் உருகுதடா என்று ஆண்டவன்பிச்சி உரிமையுடன் பாடிய பாடலை ,TMSஉள்ளம் உருகுதய்யா என்று மாற்றிப்பாடினார்)சின்னஞ்சிறு வயதிலேயே முருகப்பெருமானால் உபதேசம் செய்யப்பட்டார். பாடல் புனையும் ஆற்றல் பெற்றார்.ஓதாது உணர்ந்தார். வடமொழிப்புலமையும் பெற்றார்.வடமொழியில்,முருகனை உபாசிப்பதற் கேற்ற ஸ்லோகம்இயற்றியுள்ளார்.சிறுவயதிலேயே திருமணம்.அடுத்தடுத்துப் பிள்ளைப் பேறுகள்.5 வது பிரசவம் மிகவும்கடுமையாக இருந்தது. அது கந்தர்சஷ்டிவிழாக்காலம். குழந்தை பிறந்த 2 வது
நாள். முருகன் குழந்தை வடிவில் கனவில் தோன்றித் தன்னைப் பாடப் பணித்தான்.
பாடத் தொடங்கினார் சரளமாக.நிறையப்பாடினார். மருத்துவ மனையில இருந்த செவிலி எழுதினார் அப்படியே.பெற்ற குழந்தை அழுது கொண்டேஇருந்தது.வந்து பார்த்த மாமியார்
கோபம் கொண்டு ,” குழந்தையைப்பார்க்காமல் ஆண்டியைப் பாடிக் கொண்டுஇருக்கிறாயா?இனிமேல் பாடக் கூடாதுஆண்டியை!பாட மாட்டேன் என்று சொல்”என்று சொன்னார். மரகதம் அம்மையார் சரி என்றார் பயத்தின் காரணமாய்.காலம் ஓடியது.மாமியார் காலமானார்.
ஆண்டவன் பிச்சியின் தோழி , தான் நடத்தும் பத்திரிக்கைக்குப் பக்திப் பாடல் வேண்டும் என்று கேட்டார் ஆண்டவன் பிச்சியிடம். ஆண்டவன் பிச்சி, தம் மாமியார்,பாடல்களைப் போட்டு வைத்த பெட்டியை எடுத்துத் திறந்தார். என்ன வியப்பு!மாமியார் சேர்த்து வைத்திருந்த ரூபாய்
நோட்டுகள் எல்லாம் செல்லரிக்கப் பட்டு இருந்தன.ஆண்டவன் பிச்சி இயற்றிய முருகனைப் பற்றிய பக்திப் பாடல்கள் மட்டும் சிதலம் அடையாமல் அப்படியே இருந்தன.எல்லாம் முருகப் பெருமான் திருவிளையாடல்.பாடல்களைத்தோழிக்குக் கொடுத்தார் ஆண்டவன் பிச்சி , பத்திரிகைக்கு.‘குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!’

– நன்றி முருகன் அடிமை ந.முருகேசன்
Sri Bava

Sri Bava

Leave a Replay