மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில்

Maviddapuram Kanthaswamy Kovil

முகவரி & தொடர்பு


Address

SRI KANDASWAMY TEMPLE, MAVIDDAPURAM, Tellippalai,

GPS

9.8011385240039, 80.034415108301

Telephone


திறந்திருக்கும் நேரம்

தகவல் இற்றைப்படுத்தல்


தாங்கள் இவ்வாலயத்தின் நிர்வாகியா? இங்குள்ள தகவலை இற்றைப்படுத்த விரும்புகின்றீர்களா? பதிவு செய்து இற்றைப்படுத்துங்கள்..

இலங்கையில் காணப்படும் இந்து திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த ஒரு திருத்தலமாக மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் காணப்படுகிறது.

மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் இலங்கையின் வடபாகத்தில் காணப்படுவதுடன் யாழ்பாணத்தில் இருந்து 15 கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் இந்த ஆலயம் அமைந்துள்ளது.  இந்த ஆலயத்திற்கென சிறப்புகள் உண்டு,  இந்த ஆலயத்தின் வரலாற்றில் மாருதபுரவீகவல்லி  என்னும் இளவரசியின் குதிரை முகம் நீக்கப்பட்டது முக்கிய இடத்தினைப் பெற்றுக்கொள்கின்றது.

இந்தியாவில் தமிழ் நாட்டில் மதுரையை ஆட்சி புரிந்த  உக்கிரப்பெருவழுதி எனும் சோழ மன்னனின் மகள் மாருதபுரவீகவல்லி  குதிரை முகத்துடன் காணப்பட்டதுடன் குண்ம நோயினாலும் வருந்தினாள். எல்லா வகையான வைத்தியர்களும் வைத்தியம் செய்தும் இவளுடைய நோய் தீர வில்லை.  சாந்தலிங்க முனிவருடைய வழிக் காட்டலின் கீழ் இவ்விளவரசி தென்னிந்தியாவில் இருந்து கீரிமலை வந்து நீராடி கந்தசாமி ஆலயத்தையும் வழிப்பட்டு வந்தார். இந்நிலையில் இவருடைய நோய் நீங்கியதுடன் குதிரை முகமும் நீங்கி மகா பேரழகு பெற்று காணப்பட்டாள்.  இக்காரணத்தால் இவ்வூருக்கு மாவிட்டபுரம் (மா (குதிரை) + விட்ட + புரம்) என்ற பெயர் ஏற்பட்டது எனக் கருதப்படுகின்றது.

சோழநாட்டு இளவரசி தன் குதிரைமுகம் நீங்கியதன் கைமாறாக மதுரையில் இருந்து ஆலயத்தை நிர்மாணிப்பதற்காக சிற்பாசிரியர்களையும் பொருட்களையும் கொண்டுவந்து மாவிட்டப்புரம் கந்தசுவாமி ஆலயத்தை நிர்மாணித்தார்.  இந்த ஆலயம் பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்ததாகும்.  இதன் முதற் கும்பாபிஷேகம் கி.பி 789இல் நிகழ்ந்ததாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

போர்த்துகேயர் இலங்கை மீது படையெடுத்து இலங்கையைக் கைப்பற்றிய வேளையில், மத மாற்றும் முகமாக இந்து ஆலயங்களை அழித்து தேவாலயங்களை நிர்மாணித்தார்கள். அப்போது மாவிட்டபுரம் கந்தசுவாமிகோவிலும் பகுதியாகச் சேதப்படுத்தப்பட்டது. அவ்வேளையில் ஆலயத்தில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை மக்கள் கிணறு ஒன்றினுள் மறைத்து வைத்தார்கள். ஆனால் மாருதபுரவீகவல்லியால் நிருமாணிக்கப்பட்ட மூலஸ்தானமும் மூலவர் கந்தசுவாமியும்   இற்றைவரை அவ்வாறே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாருதபுரவீகவல்லி வழிபட்ட  வேல் இன்றும் கூட மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டு வழிபடப்படுவதைக் கண்ணுறலாம்.

தீர்த்தம் : கீரிமலை கண்டகி தீர்த்தம்

முக்கிய விழாக்கள் : கொடியேற்ற திருவிழா தினத்தன்று கொடியேற்றத்திற்கு பதிலாக காம்போற்சவ திருவிழாக்கள் 25 நாட்கள் இடம்பெறுகின்றன. திருவிழாக்கள் காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணிவரை சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், ஆராதனைகள், பிராத்தனைகள், திருமுறை ஓதுதல், மகேஸ்வர பூஜை என்பன இடம்பெறுகின்றன. மேலும் முக்கிய நிகழ்வாக அருணகிரி நாதரின் திருப்புகழ் கானாமிதங்களோடு சண்முகார்ச்சனைகளும் இடம்பெறுகின்றன.

உரை திருத்த நன்றி: மாவைக் கந்தன் முகநூல் நண்பர் (https://www.facebook.com/mavaikandan/)

Leave a review

Your email address will not be published. Required fields are marked *