
Address
6300 Princess Garden Parkway Lanham, MD 20706, USA
GPS
38.969493288694, -76.866713313392
Telephone
அருள்மிகு முருகன் திருக்கோயில் வாஷிங்டனின் பெல்ட்வே பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. வாஷிங்டனில் இருந்து சுமார் 10 மைல் தொலைவில் அமைந்துள்ள மேரிலாந்தின் லாமேன் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்திய சமூகத்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் வாழும் பகுதியில் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 7000 சதுரடி நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோயிலின் முக்கிய தெய்வம், தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான் ஆவார்.
இக்கோயிலில் கருவறை தவிர மேலும் நான்கு தனி சன்னதிகள் அமைந்துள்ளது. இதில் விநாயகர், சிவன், மீனாட்சி அம்மை மற்றும் பழநி ஆண்டவர் ஆகிய தெய்வங்கள் வீற்றிருக்கின்றன. மேலும் இக்கோயிலில் கலாச்சார மண்டபம் மற்றும் கலை அரங்கம் ஆகியனவும் அமைக்கப்பட்டுள்ளன.
வாரத்தின் இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் : காலை 9.00 – இரவு 9.00 வரை
வார நாட்கள் : காலை 9.00 – பகல் 12.00 ; மாலை 5.00 – இரவு 9.00