காப்பு நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே பஞ்சக் கரவானை பதம் பணிவாம். நூல் ஆடும் பணிவே லணிசே வலெனப் பாடும் பணியே பணியா யருள்வாய் தேடுங் கயமா முகனைச் செருவிற் சாடுந் தனியா னைசகோ தரனே. 1 உல்லாச நிராகுல யோக விதச் சல்லாப விநோதனு நீயலையோ எல்லாமற என்னை யிழந்த நலஞ் சொல்லாய் முருகா கரபூ பதியே. 2 வானோ புனல்பார் கனல்மா ருதமோ […]
read more