Radius: Off
Radius: km
Set radius for geolocation
blog-title Blog

Blog

அருணகிரிநாதர்

அருணகிரிநாதர், தெற்கிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் சென்னைக்கு அருகே உள்ள திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப்போல் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 […]

read more

அற்புதங்கள் தொகுப்பு

சண்முகர்சிலையின் அற்புதம் திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் டச்சுக்காரர்களும் [உலாந்தகர்] போர்ச்சுக்கீசியர்களும் [பரங்கியர்]அவ்வப்போது ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.திருமலைக்கு கப்பல் படை இல்லாததும் தலைநகரமான மதுரையிலிருந்து தென்கோடியை அவரது இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வைக்கஇயலாமல் போனதும் அந்நியரின் கையும் மதமும் வேறூன்ற வித்திட்டது.கப்பல் வலிமையுடனிருந்த டச்சுக்காரர்களும் போர்ச்சுக்கீசியர்களூம் கடற்கரை பகுதிக்குள் அத்துமீறிக்கொள்ளை அடித்துவிட்டு கடல் வழியாகத் தப்பிச் செல்லும் போக்குடையவர்களாக இருந்தனர்.கொற்கைக் குடாவான மன்னார் வளைகுடாவில் விளைந்த முத்துக்களும்,சங்குகளும், கடற்கரையோரமிருந்த கோயில்களின் பொற்சிலைகளும், கருவூலங்களும் அக்கொள்ளையர்களின் கொள்கைகளாகயிருந்தன. கி.பி.1635 […]

read more

திருப்புகழ் தோன்றிய வரலாறு

அருணகிரிநாதர் உலகை வெறுத்து உயிரை மாய்த்துக் கொள்வதற்காகத் திருவண்ணாமலைக் கோபுர உச்சியிலிருந்து குதித்தபோது அவரைத் தன்செங்கையில் ஏந்தித் தன் கருணைத் திருப்பாதங்களைக் காட்டி ஆட்கொண்டான் முருகன். நினைக்க முத்தி அருளும் திருவண்ணாமலையில் அருணகிரிநாத சுவாமிகள்முருகப்பெருமானிடம் “சும்மா இரு சொல்லற” என்ற மௌன மந்திரோபதேசம் பெற்று நிர்விகற்ப சமாதியில் வீற்றிருக்க, முருகன் மயில் மிசைத்தோன்றி, “உலகம் உய்யத் திருப்புகழ் பாடுதி” என்றருள் புரிய அருணகிரியார் மறைகளாலும் சாற்றுதற்கரிய தேவரீரது புகழை “ஏடெழுதா முழு ஏழையாகிய” சிறியேன் எங்ஙனம் பாடுவேன் […]

read more

முத்தைத் தரு பத்தித் திருநகை

முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கிறை   சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ….எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பதுமூ வர்க்கத்து அமரரும் ….அடிபேண பத்துத் தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ….இரவாகப் பத்தற்கு இரதத்தைக் கடவிய பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ….ஒருநாளே தித்தித் தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கு ஒக்கு நடிக்கக் கழுகொடு …. […]

read more

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் , (பி.1850-52அ,இ.மே 30,1929) தமிழ்நாட்டில் இராமேசுவரம் தீவில் அமைந்துள்ள பாம்பன் என்ற ஊரில் பிறந்த வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் எழுதியுள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும், சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவரியற்றிய சண்முக கவசம் […]

read more

சுப்ரமண்ய புஜங்கம்

ஸ்ரீ ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் அபிநல குப்தரின் அபிசார மந்தீரீக ஏவலால் கடும் வயிற்றுவலியால் அவதியுற்று, வட நாட்டிலிருந்து புறப்பட்டு பல திருத்தலங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபட்டும் அந்நோய் தீர்ந்தபாடில்லை. திருச்சீரலைவாய் என்று வழங்கப்படும் திருச்செந்தூர் வந்து திருச்செந்திலாண்டவனை மனமுருக வேண்டி பன்னீர் இலை விபூதியை சாப்பிட்டதும் அதுவரை அவரை வாட்டி வதைத்த வயிற்றுவலி அறவே நீங்கி விட்டது கண்டு மகிழ்ச்சியால் செந்திலாண்டவனை அவர் துதித்த 33 ஸ்லோகமே ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் இதை மனமுருக பாராயணம் […]

read more

சண்முக கவசம் – பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

அண்டமாய் அவனியாகிஅறியொணாப் பொருளது ஆகித் தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி எண்திசை போற்ற நின்ற என் அருள் ஈசன் ஆன திண்திறல் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க ஆதியாம் கயிலைச் செல்வன் அணிநெற்றி தன்னைக் காக்க தாது அவிழ் கடப்பந் தாரான் தானிறு நுதலைக் காக்க சோதியாம் தணிகை ஈசன் துரிசு இலா விழியைக் காக்க நாதனாம் கார்த்திகேயன் நாசியை நயந்து காக்க இரு செவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க வாயை முருகவேள் காக்க […]

read more

சுப்ரமணியர் மந்திரங்கள்

சுப்ரமணியர் காயத்ரி “ஓம் தத் புருஷாய வித்மஹே மஹா ஸேநாய தீமஹி தந்நோ ஷண்முக: ப்ரசோதயாத்”    ஸ்கந்த காயத்ரி ஓம் கார்த்திகேயாய வித்மஹே! சக்தி ஹஸ்தாய தீமஹீ! தந்தஸ்கந்த: ப்ரசோதயாத்!! சுப்ரமணியர் மந்திரங்கள் ஸ்கந்தர்:-ஓம் ஸ்ரூம்ஸ்கந்தாய நம: சுப்ரமணியர்:-ஓம்ஸெளம் ஸுப்ரமண்யாய நம: குமாரர்:-ஓம் க்ரூம் குமாரய நம: குஹர்:-ஓம் ஸீம் ஸவாமி குஹாய நம: சரவணபவர்:-ஓம் ஸ்ரீம் சம் சரவணபவாய நம: ஷண்முகர்:-ஓம் ஹ்ரீம் ஹம் ஷண்முகாய நம: அதிவிஷேசமான ஸ்ரீ சிவசுப்பிரமணிய த்ரிசதி கந்தபிரானது […]

read more

திருமுருக கிருபானந்த வாரியார்

திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகஸ்ட் 25, 1906 – நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். “அருள்மொழி அரசு”, என்றும் “திருப்புகழ் ஜோதி” என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர். வாழ்க்கைக் குறிப்பு இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் […]

read more

அறுமுகநூறு – கவிஞர் சச்சிதானந்தம்

தமிழெனும் மந்திரம் தருவாய் போற்றி, உமியெனும் செருக்கை அறுப்பாய் போற்றி, சிமிழெனக் குவிந்த குறுநகை போற்றி, அமிழ்ந்திடும் மனமுன் அடியைப் போற்றி! 11   அரும்பாத தாமரைப் புன்னகை போற்றி, அரும்பாதம் பற்றியே போற்றுவோம் போற்றி, தரும்பாதம் பற்றினால் வரம்தருவான் போற்றி, விரும்பாத பேருக்கும் அருளுவான் போற்றி! 12   ஐந்தமு துணவின் சுவையே போற்றி, நைந்தம னங்களுக் கருள்வாய் போற்றி! வைந்தவ ரெல்லாம் வருவார் போற்றி, பைந்தமிழ் மைந்தன் பெருமை போற்றி! 13   இசைக்கு […]

read more
Testimonials  |  Info: There are no items created, add some please.